புதிதாக விமான சேவையை தொடங்கியது - ஏர் ஒடிஷா நிறுவனம்

Salem Puducherry to the newly launched air service Air Odisha

புதுச்சேரியில் இருந்து சேலம், சென்னைக்கு புதிதாக விமான சேவையை ஏர் ஒடிஷா நிறுவனம் வழங்க உள்ளது. இச்சேவை வரும் ஜுன் 15 ஆம் தேதி முதல் தொடங்கிறது.

’ட்ரூஜேட் நிறுவனம்’ கடந்த மார்ச் மாதம் முதல் சேலம், சென்னை இடையே விமான சேவையை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கிவைத்தார். இதனை சேலத்தில் இருந்து விமான சேவையே வழங்க ஏர் ஒடிஷா நிறுவனம் முன்வந்துள்ளது. புதுச்சேரி ,சேலம், சென்னைக்கும் விமானத்தை இயக்குவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

சென்னையில் காலை 8.10க்கு பிறப்பட்டு 8.55க்கு புதுச்சேரியை வந்தடையும். அதன் பின்னர் புதுச்சேரியில் மதியம் 1.15க்கு புறப்பட்டு 2மணிக்கு சென்னை வந்தடையும், அங்கிருந்து புதுச்சேரிக்கு காலை 9.10க்கு புறப்பட்டு 10 மணிக்கு சேலம் வந்தடையும், பின்னர் சேலத்தில் இருந்து மதியம் 12.15க்கு புறப்பட்டு 1 மணிக்கு புதுச்சேரி வந்தடையும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. பயண நேரம் 45 நிமிடங்கள் தான்.தற்போது முன்பதிவும் தொடங்கியுள்ளது.

கட்டண விவரம் பின்வருமாறு;

1. சென்னை – புதுச்சேரி ரூபாய் 1,940.

2. புதுச்சேரி – சென்னை ரூபாய் 1,470.

3. புதுச்சேரி – சேலம் ரூபாய் 1,550.

4. சேலம் – புதுச்சேரி ரூபாய் 1,550.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading புதிதாக விமான சேவையை தொடங்கியது - ஏர் ஒடிஷா நிறுவனம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ரஜினியின் பேரன் வேத் பிறந்தநாள் கொண்டாட்டம்: புகைப்படங்கள் உள்ளே

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்