தமிழகத்தில் நிபா வைரஸ் அறிகுறியா? சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்

தமிழகத்தில் நிபா வைரஸ் காய்ச்சல் அறிகுறி இல்லை என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள அம்மா மாளிகையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் பங்கேற்ற தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடையே பேட்டியளித்தார்.
 
அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தில் நிபா வைரஸ் தாக்கம் இல்லை. நிபா வைரஸ் குறித்து வரும் வதந்திகளை பொது மக்கள் நம்பவேண்டாம். தமிழகத்தில் நிபா வைரஸ் காய்ச்சல் வராமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள், முன்னெச்சரிக்கையாக எடுக்கப்பட்டுள்ளது.
 
மேலும், கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் சில நாட்கள் முன்பு, சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் உடல் உறுப்பு திருட்டு நடப்பதாக புகார் ஒன்றை பதிவு செய்தார். அதற்கு பதில் அளித்த ராதாகிருஷ்ணன்: குறிப்பிட்ட அந்த தனியார் மருத்துவமனையில் சோதனை மற்றும் விசாரணை நடந்து வருகிறது. 
 
சென்னை குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் எக்ஸ்ரே பிலிம் பற்றாக்குறை உள்ளது என்று புகார் வந்துள்ளது. எக்ஸ்ரே பிலிம் பற்றாக்குறையை உடனடியாக சரி செய்யவும் எதிர்காலத்தில் இது போன்ற ஒரு நிலைமை ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading தமிழகத்தில் நிபா வைரஸ் அறிகுறியா? சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மனைவிகளின் கொடுமையில் இருந்து கணவன்களை காக்க தனி ஆணையம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்