பெட்ரோல், டீசல் விலை 7வது நாளாக குறைப்பு

தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வந்த பெட்ரோல், டீசல் விலை இன்றுடன் 7வது நாளாக குறைத்து நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், பெட்ரோல் விலை ரூ.81க்கும் மேல் தாண்டியது. இதனால், வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வந்தனர்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் நிலவரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ஆகியவற்றால் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்ததாக கூறப்பட்டது.
இந்நிலையில், கடந்த 7 நாட்களாக பெட்ரோல் விலையில் நாள்தோறும் சிறிது சிறிதாக குறைத்துக் கொண்டு இருக்கின்றனர்.

இந்நிலையில், சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலையில் 14 காசு குறைத்து ரூ.80.80க்கு விற்பனையானது. இதேபோல், சென்னையில் நேற்று டீசல் விலையில் 10 காசு குறைந்து ரூ.72.72க்கு விற்பனையானது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading பெட்ரோல், டீசல் விலை 7வது நாளாக குறைப்பு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - வகுப்பறையில் களியாட்டம் - அமெரிக்காவில் ஆசிரியருக்கு கல்தா

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்