ஸ்டாலினை யாரும் விமர்சிக்கக் கூடாது - வைகோ

ஸ்டாலினை யாரும் விமர்சிக்கக் கூடாது என்று வைகோ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேற்கொண்டு கூறியதாவது:தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஆருயிர்ச் சகோதரர் தளபதி மு.க.ஸ்டாலின் குறித்தோ, நம் இயக்கத் தோழர்கள் முகநூலிலோ இணையதளத்திலோ, வாட்ஸ் அப்பிலோ, சமூக வலைதளங்களிலோ எந்த விமர்சனமும் செய்யக்கூடாது. அப்படிச் செய்பவர்கள் மதிமுக நலனுக்குப் பெருங்கேடு செய்பவர்கள் ஆவார்கள்.

இதனை மீறிச் செயல்படுகின்றவர்கள் ம.தி.மு.க.வினராகவோ, ஆதரவாளர்களாகவோ, பற்றாளர்களாகவோ கருதப்பட மாட்டார்கள். ம.தி.மு.க.வுக்கும் அவர்களுக்கும் எள் அளவு தொடர்பும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

You'r reading ஸ்டாலினை யாரும் விமர்சிக்கக் கூடாது - வைகோ Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சமூக அநீதியை பல்கலைக்கழக நிர்வாகங்கள் இழைத்து வருகின்றன - ராமதாஸ்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்