தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்த சிபிஐ விசாரணைக்கு தடை இல்லை- சுப்ரீம் கோர்ட் அதிரடி

Thuthukudi Gunfire CBI enquiry SupremeCourt Ban

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து சிபிஐ நடத்தும் விசாரணைக்கு தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் அதிரடியாக தெரிவித்துள்ளது. இது தமிழக அரசுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூடக் கோரி நடைபெற்ற போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியாகினர். இந்த சம்பவம் தொடர்பாக தமிழக அரசு சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது.

இதை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டதுடன் சிபிஐ விசாரணையும் கோரப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள் நீதியரசர்கள் சி.டி. செல்வம், பஷீர் அகமது ஆகியோர் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை கடுமையாக கண்டித்ததுடன் சிபிஐ விசாரணைக்கும் உத்தரவிட்டனர்.

சிபிஐ விசாரணை வளையத்தில் தமிழக போலீசார், வருவாய்துறையின் விசாரிக்கப்படுவதால் இது தமிழக அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது. இதையடுத்து சிபிஐ விசாரணைக்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தை நாடியது தமிழக அரசு.

ஆனால் தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்து சிபிஐ விசாரணைக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது உச்சநீதிமன்றம்.

cbi-register-case-against-tn-police

You'r reading தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்த சிபிஐ விசாரணைக்கு தடை இல்லை- சுப்ரீம் கோர்ட் அதிரடி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஊட்டி உருளை ஆராய்ச்சி நிறுவனத்தையும் இழுத்து மூடும் மோடி அரசுக்கு அன்புமணி கடும் கண்டனம்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்