தினகரன் கோஷ்டியில் இருந்து 6 தகுதி நீக்க எம்.எல்.ஏக்களும் திமுகவுக்கு ஜூட்!

Six Ex MLAs from Dinakaran camp to join DMK

தினகரன் கோஷ்டியில் இருந்து 6 தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களும் திமுகவுக்கு தாவ இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தினகரனுக்கு நெருக்கமாக இருந்த செந்தில் பாலாஜி திமுகவுக்கு தாவுகிறார். திமுகவில் அவர் அதிகாரப்பூர்வமாக இணைவது உறுதியாகி உள்ளது.

தம்முடன் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 6 எம்.எல்.ஏக்களையும் திமுகவுக்கு அழைத்துக் கொண்டு போகிறார் செந்தில் பாலாஜி. கரூர் மாவட்டத்தில் மட்டுமல்ல கொங்கு மண்டலத்தில் தமக்கு செல்வாக்கு இருக்கிறது என்பதை நிரூபிப்பதில் முழு மூச்சாக இருக்கிறாராம் செந்தில் பாலாஜி.

சென்னையில் இது தொடர்பாக திமுகவின் கொள்கை பரப்பு செயலாளர் ஆ. ராசா உள்ளிட்டோருடன் ஆலோசனையும் நடத்தி இருக்கிறார் செந்தில் பாலாஜி. தினகரனைப் பொறுத்தவரையில் தம்மை மட்டுமே முன்னிலைப்படுத்த நினைக்கிறார்.

அரசியலிலும் குடும்பத்திலும் தாமே எல்லாம் என்கிற எண்ணத்தில் வலம் வருகிறார். இதனால்தான் தினகரனிடன் யாரும் ஒட்டாமல் தப்பி வருவதாக கூறப்படுகிறது.

செந்தில் பாலாஜி உள்ளிட்டோரின் இந்த அதிரடிகளால் ரொம்பவே ஆடிப் போயிருக்கிறாராம் தினகரன்!

You'r reading தினகரன் கோஷ்டியில் இருந்து 6 தகுதி நீக்க எம்.எல்.ஏக்களும் திமுகவுக்கு ஜூட்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தினகரனுக்கு குட்பை...திமுகவில் செந்தில் பாலாஜி- 'கன்பார்ம்’ செய்யும் போட்டோ!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்