கருணாநிதி சிலை திறப்பு விழா.. இதெல்லாம் அசிங்கமா இல்லையா மிஸ்டர் தயாநிதி மாறன், திருநாவுக்கரசர்!

Thirunavukkarasar and Dayanidhi at Karunanidhi Statue Unveil Function

சென்னை அண்ணா அறிவாலயத்தில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி சிலை திறப்பு விழா மேடையில் ஸ்டாலினால் நிராகரிக்கப்பட்டு வரும் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் ஆகியோர் நாங்களும் இருக்கிறோம் என்பதைப் போல பரிதாபமாக நின்றிருந்த சுவாரசிய காட்சியும் அரங்கேறியது.

என்னதான் காங்கிரஸ் கூட்டணி கட்சியாக இருந்தாலும் திருநாவுக்கரசரை பக்கத்தில் சேர்ப்பதே இல்லை என்பதில் ஸ்டாலின் திட்டவட்டமாக இருக்கிறார். திருநாவுக்கரசரை ஒரு நம்பகமான தலைவராக ஸ்டாலின் கருதவில்லை என்பதுதான் இதற்கு காரணம்.

ஏனெனில் தினகரனை இழுத்துக் கொண்டு போய் காங்கிரஸுடன் கூட்டணிக்கு முயற்சித்தவர் திருநாவுக்கரசர். அதேபோல் சசிகலாவிடமும் மிக நெருக்கமானவர் அவர்.

மேலும் ரஜினிகாந்துடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இதனால் டெல்லியில் இருந்து காங்கிரஸ் தலைவர்கள் யார் வந்தாலும் சந்திக்கும் ஸ்டாலின் அச்சந்திப்பின் போது திருநாவுக்கரசர் இல்லாமலேயே பார்த்துக் கொண்டார்.

அதேபோல டெல்லி அரசியலுக்கு கருணாநிதி, தயாநிதி மாறனை பயன்படுத்தி வந்தார். ஆனால் டெல்லி அரசியலி ஸ்டாலின் மாப்பிள்ளை சபரீசன் கையில் எடுத்த பின்னர் தயாநிதி ஓரம் கட்டப்பட்டார்.

அண்மையில் ஸ்டாலின் டெல்லி சென்ற போது தயாநிதி மாறனை அழைக்கவில்லை. வழக்கத்துக்கு மாறாக சோனியா-ராகுல் சந்திப்பில் மாப்பிள்ளை சபரீசன் முன்னிறுத்தப்பட்டார்.

இதனால் கடுப்பாகிப் போன தயாநிதி மாறன் ஸ்டாலினுக்கு எதிராக குழிபறிக்க தொடங்கிவிட்டார். இப்படி விரட்டப்பட்ட திருநாவுக்கரசரும் தயாநிதி மாறனும் இன்றைய முக்கிய கூட்டத்தை வாய்ப்பாக பயன்படுத்தி தலைகாட்டிக் கொண்டனர்.

தயாநிதியின் சன் நியூஸ் தொலைக்காட்சி அவர் தலைகாட்டும் காட்சிகளை மீண்டும் மீண்டும் ஒளிபரப்பியதுடன் ஸ்குரோலிங்கிலும் மறக்காமல் தயாநிதி பெயரை சேர்த்து எழுதி இருப்பை காட்டிக் கொண்டது.

You'r reading கருணாநிதி சிலை திறப்பு விழா.. இதெல்லாம் அசிங்கமா இல்லையா மிஸ்டர் தயாநிதி மாறன், திருநாவுக்கரசர்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் சோனியா, ராகுல் மரியாதை

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்