டிடிவிக்கு ஆதரவு: அதிமுகவிடம் காரை ஒப்படைக்க நாஞ்சில் முடிவு

சென்னை: டிடிவி தினகரன் தலைமையை ஏற்ற நாஞ்சில் சம்பத்துக்கு கட்சி அளித்த இன்னோவா காரை திரும்ப கேட்டதால் அதிமுகவிடமே திரும்ப ஒப்படைக்க அவர் முடிவு செய்துள்ளார்.

தனது அரசியல் வாழ்க்கையில் முதலில் மதிமுகவில் இருந்தார் நாஞ்சில் சம்பத். பின்னர், அதில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். அப்போது, கொள்கை பரப்பு துணை செயலாளர் பதவியுடன் இன்னோவோ கார் ஒன்றையும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, சசிகலா தலைமை என வந்தபோது முதலில் சம்பத் ஏற்கவில்லை. கட்சியில் இருந்து விலகப்போவதாகவும், காரை அதிமுகவிடம் ஒப்படைக்கப்போவதாகவும் அப்போது அவர் தெரிவித்தார்.
ஆனால், அதன் மறுநாளே சம்பத் சசிகலாவை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். காரை ஒப்படைக்கவில்லை.

தற்போது, கட்சியில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் கைகோர்த்துள்ளதால், நாஞ்சில் சம்பத் டிடிவி தினகரனுக்கு ஆதரவாளராக உள்ளார்.
இதனால், இன்னோவா காரை ஒப்படைக்குமாறு கட்சி கேட்டுள்ளதை அடுத்து, நாளை அல்லது நாளை மறுநாள் காரை திரும்ப ஒப்படைக்க நாஞ்சில் சம்பத் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

You'r reading டிடிவிக்கு ஆதரவு: அதிமுகவிடம் காரை ஒப்படைக்க நாஞ்சில் முடிவு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தோல்வியின் பிடியில் இந்திய அணி - 35 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் இழந்து திண்டாட்டம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்