ரூ.597 சலுகை - வோடபோனா? ஏர்டெல்லா? எது பெஸ்ட்.

Prepaid recharge Vodafone or airtel which is best

வோடபோன், ஏர்டெல், ஜியோ போன்ற தொலைத்தொடர்பு நிறுவனக்களுக்கு மத்தியில் அடிக்கடி போட்டி அதிகரித்து கொண்டு வருருகிறது. இதனால் வாடிக்கையாளர்களுக்கான சலுகைகள் அதிகமாக போட்டி போட்டு வழங்கப்படுகிறது.

அதன்படி தற்போது வோடபோன் நிறுவனம் தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு ரூ.597 விலையில் புதிய சலுகையை அறிவித்துள்ளது. இந்த சலுகை ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.597 சலுகைக்கு போட்டியாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

வோடபோன் சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ் மற்றும் 10 ஜிபி டேட்டா, 168 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்களுக்கு இந்த சலுகையின் வேலிடிட்டி 112 நாட்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் அளவு தினமும் 250 நிமிடங்கள் என்பதால் பயனர்கள் தினமும் 4 மணி நேரம் 10 நிமிடங்கள் மட்டுமே பேச முடியும். ஆனால், ஏர்டெல் வழங்கும் சலுகையில் வாய்ஸ் கால் பேச எவ்வித கட்டுப்பாடும் விதிப்பதில்லை, மேலும் வேலிடிட்டி காலம் 168 நாட்களாக ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது.

சரிதான் இதுல எது பெஸ்ட்?

You'r reading ரூ.597 சலுகை - வோடபோனா? ஏர்டெல்லா? எது பெஸ்ட். Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இரட்டை குழந்தைகள் பலி: அதிகாரிகளின் மெத்தனபோக்கே காரணம்- எம்எல்ஏ சுதர்சனம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்