வாசுதேவநல்லூர் பொது தொகுதியாக அறிவிக்க கோரிய வழக்கு : தீர்ப்பு ஒத்திவைப்பு

வாசுதேவ நல்லூர் தொகுதியை பொதுத் தொகுதியாக அறிவிக்கக் கோரிய வழக்கின் தீர்ப்பினை ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் உத்தரவு.

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள முள்ளிக்கும் கிராமத்தைச்
சேர்ந்த சந்திரமோகன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்,முள்ளிக்குளம் கிராமம்
வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதியில் உள்ளது. பல ஆண்டுகளாக வாசுதேவநல்லூர் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்ட தனித் தொகுதியாக உள்ளது. இங்கு எஸ்சி, எஸ்டி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் இருப்பதால் இந்த தொகுதி அந்த சமூகத்தினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாகப் பிற சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இந்த தொகுதியில் போட்டியிட இயலாத நிலை உள்ளது. ஆகவே வாசுதேவநல்லூர் தொகுதியை பொது தொகுதியாக அறிவிக்க உத்தரவிட வேண்டுமெனக் கூறியிருந்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு, வழக்கினை தீர்ப்பிற்காக ஒத்தி வைத்தனர்.

You'r reading வாசுதேவநல்லூர் பொது தொகுதியாக அறிவிக்க கோரிய வழக்கு : தீர்ப்பு ஒத்திவைப்பு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு CBI ல் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்