rdquoநான் இனவெறியனா?rdquo : கண்டனங்களைக் கண்டுகொள்ளாத ட்ரம்ப்!

அமெரிக்காவில் வெளிநாட்டினருக்கான உரிமைகள் தொடர்பான மாநாடு கடந்த வாரம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தலைமையில் வெள்ளை மாளிகையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஆப்ரிக்க நாட்டினரை தகாத வார்த்தையால் விமர்சித்த ட்ரம்ப்புக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

அமெரிக்காவில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இதுபோன்ற அமெரிக்கவாழ் வெளிநாட்டினருக்கான மறு சீரமைப்பு குறித்த மாநாடு கடந்த வாரம் வெள்ளை மாளிகையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்குத் தலைமை வகித்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பேசுகையில், “அமெரிக்க அதிபராக நான் அமெரிக்காவையே முன்வைக்க விரும்புகிறேன். ஆனால், அமெரிக்காவை மேலும் வலிமையாக்க அமெரிக்க வந்து பணியாற்றி குடியேற விரும்புபவரகள் அதற்குத் தகுதியான முறையிலேயே உள்நுழைய வேண்டும்” என்றார்.

மேலும், இந்தக் கூட்டத்தில் ஆசிய மற்றும் ஆப்ரிக்காவைச் சேர்ந்தோர் குறித்து ட்ரம்ப் கூறுகையில், “அமெரிக்காவில் குடியேற ஹைதி, ஹோண்டுராஸ் போன்ற ஆப்ரிக்க நாடுகளைச் சேர்ந்தோருக்கு அனுமதி அளிப்பதற்கு அவசியம் இல்லை என்றே கருதுகிறேன்” என்று தகாத வார்த்தைப் பிரயோகத்தால் விவரித்தார்.

அமெரிக்க அதிபரின் இந்தப் பேச்சுக்கு சர்வதேச அளவில் பெரும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இந்தக் கூட்டத்துக்குப்பின் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில்கூட அமெரிக்க அதிபரோ வெள்ளை மாளிகையின் சார்பிலோ அதிபரின் தகாத வார்த்தை உபயோகத்துக்கு மன்னிப்போ விளக்கமோ அளிக்கப்படவில்லை. மேலும் பத்திரிகையாளர்களின் இனவெறி தொடர்பான கேள்விக்கும் ’தன்னை ஒரு இனவெறியனாக அடையாளப்படுத்த முடியாது’ என்றே ட்ரம்ப் பதிலளித்துள்ளார்.

You'r reading rdquoநான் இனவெறியனா?rdquo : கண்டனங்களைக் கண்டுகொள்ளாத ட்ரம்ப்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 5 ஆயிரம் ரூபாய்க்கு ஸ்மார்ட்போன்: இந்திய மொபைல் சந்தையில் ஜியோமி அதிரடி!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்