மாலி நாட்டில் இலங்கை ராணுவம் மீது தாக்குதல்- 2 அதிகாரிகள் பலி

Attack on Sri Lankan army in Maali-2 officers killed

மேற்கு ஆப்பிரிக்காவில் மாலி நாட்டில் ஐநா அமைதிப் படையில் பங்கேற்றுள்ள இலங்கை ராணுவம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 2 அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளனர். இத்தாக்குதல் போர்க்குற்றம் என சாடியுள்ளது ஐநா.

மாலியில் ஐநா அமைதிப்படையில் 200 இலங்கை ராணுவத்தினர் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் ஒரு ஆண்டுக்கும் மேலாக அங்கு பணியாற்றி வருகின்றனர்.

மாலியின் டோன்ற்சா என்ற இடத்தில் ரோந்து நடவடிக்கைய முடித்துவிட்டு திரும்பிய இலங்கை ராணுவ அணியினர் உள்நாட்டு தீவிரவாதிகளின் கண்ணிவெடி தாக்குதலில் சிக்கினர். இதில் சம்பவ இடத்திலேயே 2 அதிகாரிகள் பலியாகினர்.

மேலும் பலர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இத்தாக்குதலை ஐநா, போர்க்குற்றம் என சாடியுள்ளது.

You'r reading மாலி நாட்டில் இலங்கை ராணுவம் மீது தாக்குதல்- 2 அதிகாரிகள் பலி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மதுரை அருகே எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி நாளை அடிக்கல் நாட்டுகிறார்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்