தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 111 மாணவிகள் மாயம்? நைஜீரியாவில் பதற்றம்

நைஜீரியாவில் போகோ ஹாரம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் நூற்றுக்கும்மேற்பட்ட மாணவிகள் மாயமாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் நைஜீரியாவில் பதற்றமான சூழல் உருவாகி உள்ளது.

ஆப்பிரிக்கா, நைஜீரியாவில் போகோ ஹாரம் தீவிரவாதிகள் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். இதுபோல், வடகிழக்கு நைஜீரியாவில் உள்ள பள்ளியில் போகோ ஹராம் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில், நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் மாயமாகி உள்ளனர்.

மொத்தமுள்ள 926 மாணவிகளில் 815 மாணவிகள் வீடு திரும்பி உள்ளனர் என்றும் 111 மாணவிகளை காணவில்லை என்றும் போலீசார் தெரிவித்தனர். இதனால், காணமால் போன மாணவிகளை தேடுபணியில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், இந்த மாணவிகளின் நிலை என்ன என்பது குறித்து தெரியாமல் அவர்களின் பெற்றோர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அங்கு பதற்றமான சூழல் உருவாகி உள்ளது.

You'r reading தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 111 மாணவிகள் மாயம்? நைஜீரியாவில் பதற்றம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - “ரேஷன் பொருள் வாங்க இனி ஆதார் தேவையே இல்லை”- இது டெல்லி முதல்வரின் உத்தரவு!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்