உதவியாளருடன் உல்லாசம்: கர்ப்பமாக்கிய ஆஸ்திரேலிய துணை பிரதமர் ராஜினாமா

சிட்னி: பெண் உதவியாளருடன் உல்லாசமாக இருந்துவிட்டு, தற்போது அவர் கர்ப்பமானதால் இதற்கு காரணமான ஆஸ்திரேலிய துணை பிரதமர் பர்னபி ஜாய்ஸ் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவின் தேசிய கட்சி தலைவரும் துணை பிரதமருமானவர் பர்னபி ஜாய்ஸ். இவரின் கீழ் ஊடக ஆலோசகராக பணிபுரிந்து வந்தவர் விக்கி கேம்பியன் (33). துணை பிரதர் பர்னபி ஜாய்ஸ் விக்கி கேம்பியனுடன் நெருங்கி பழகி வந்துள்ளார். இதனால், விக்கி கர்ப்பமானார். இந்த விஷயம் அனைவரிடையே பரவியது.

இதையடுத்து, பொது வாழ்க்கையில் ஈடுபடுபவர்கள் தவறு செய்யக்கூடாது என்றும் உயர் பதவிகளை வகிப்பவர்கள் தங்களுக்கு கீழ் பணிபுரியும் ஊழியர்களுடன் எவ்வித உறவும் வைத்துக்கொள்ள கூடாது என்ற புதிய சட்டத்தை இயற்ற வேண்டும் என நாடாளுமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதற்கு பல்வேறு தரப்பிடம் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், தனது பதவியை ராஜினாமா செய்யப் போவதாக பர்னபி ஜாய்ஸ் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

You'r reading உதவியாளருடன் உல்லாசம்: கர்ப்பமாக்கிய ஆஸ்திரேலிய துணை பிரதமர் ராஜினாமா Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ரேவதி, சில்க் சில்க் சில்க் தொடர்ந்து ஜோ..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்