ஈரான் ஏவுகணை தாக்குதலால் தான் விமானம் விபத்துக்குள்ளானதா?

Was the plane crashed during an Iranian Anti missile strike?

ஈரானின் தளபதி சொலெய்மணி அமெரிக்காவால் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் விதமாக அமெரிக்க விமான தளவாடங்கள் அமைந்துள்ள இராக்கில் 22 ஏவுகணைகளை கொண்டு ஈரான் தாக்கியது.இதில் 80 அமெரிக்கர்கள் பலியானதாக ஈரான் அரசு கூறியது.ஆனால் அமெரிக்கா அதை ஏற்று கொள்ளவில்லை.

இந்நிலையில் ஈரான் நாட்டைசேர்ந்த பயணிகள் விமானம் விபத்துக்குள்ளாகி 180 பயணிகள் மற்றும் ஊழியர்கள் பலியாயினர்.இதற்கு வருத்தம் தெரிவித்த ஈரான் அதிபர் அதற்கான காரணத்தை வெளியிடவில்லை.விபத்து தொடர்பாக எந்தவிதமான அறிக்கையும் ஈரான் அரசால் வெளியிடப்படவில்லை.

உலகமே இதை விபத்தாக பார்த்துக்கொண்டிருக்க இன்று வெளியான வீடியோ ஒரு ஏவுகணை தாக்கி விமானம் நொறுங்கி விழுவதை தத்ரூபமாக விளக்குகிறது.இதை ஆமோதித்து தன் நாட்டு மக்கள் அறுபது பேரை இவ்விபத்தில் பறிகொடுத்த கனடா நாட்டு அதிபர் ஜஸ்டினும் அறிக்கைவிடுத்துள்ளார் .அதில் தவறுதலாக ஈரானில் அந்நிய நாட்டால் ஏற்படும் வான் வழி தாக்குதலை முறியடிக்கும் எதிர்ப்பு ஏவுகணை அந்நாட்டு பயணிகள் விமானத்தையும் தாக்கியதாக கூறியுள்ளார்.

ஏற்கனவே இந்த தவறு நேர்ந்திருக்கலாம் என தனக்கும் சந்தேகம் இருந்ததாகவும் அது இப்போது ஊர்ஜிதமாகியிருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் தன் பங்கிற்கு கூறியுள்ளார்.ஈரான் இதை மறுக்குமா இல்லை ஒப்புக்கொள்ளுமா என அந்நாட்டின் விசாரணையின் முடிவில் தெரிய வரும்

You'r reading ஈரான் ஏவுகணை தாக்குதலால் தான் விமானம் விபத்துக்குள்ளானதா? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பொங்கல் 2020 ! சிறப்பு பஸ்களுக்கு முன்பதிவு தொடங்கியது..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்