சீனாவிலிருந்து மீண்டும் ஒரு வைரஸ் ! இது கொரோனாவை விட ஆபத்தானது !

A virus back from China! This is more dangerous than the corona!

கடந்த சில தினங்களாகச் சீனாவில் ப்ரூசெல்லோசிஸ் எனப்படும் புதிய பாக்டீரியா நோய் மனிதர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தி வருவதாகப் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது. சீனாவின் லான்ஷோ பகுதியில் இதுவரை 3,245 பேருக்கு இந்நோய்ப் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இது கால்நடைகளுடன் கொண்ட தொடர்பு காரணமாகப் பரவுகிறது என்ற தகவலையும் விஞ்ஞானிகள் வெளியிட்டு உள்ளனர்.

கடந்த வருடம் சீனாவின் வடமேற்குப் பகுதியில் இருக்கும் ஒரு உயிர் மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து இந்நோய் முதன் முதலாகப் பரவியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து அந்நாட்டின் அதிகாரப்பூர்வ ஊடகமான குளோபல் டைம்ஸ் கடந்த 2019 ஜுலை 24- ஆகஸ்ட் 20 வரை இந்த விபத்து ஏற்பட்டது என்றும் தெரிவித்து உள்ளது.

கால்நடைகளுக்குச் செலுத்தப்படும் புரு செல்லா எனப்படும் தடுப்பூசியைத் தயாரித்து வந்த ஜாங்மு லான்ஜோ எனும் தயாரிப்பு நிறுவனத்தில் காலாவதியான கிருமிநாசினி மருந்து வைக்கப்பட்டு இருந்ததாகவும் இந்த மருந்தில் இருந்தே முதன்முதலில் ப்ரூசெல்லா எனப்படும் பாக்டீரியா தொற்று பரவியதாகவும் தகவல் கூறப்படுகிறது. கடந்த ஆண்டின் நவம்பர் மாதத்திலேயே அப்பகுதியில் உள்ள 181 பேருக்கு இந்நோய்ப் பாதிப்பை ஏற்படுத்தியது என்றும் தரவுகள் தெரிவிக்கின்றன.

இத்தொற்று நோய் குறித்து அப்பகுதியில் செயல்பட்டுவரும் நகரச் சுகாதார ஆணையம், இந்நோய் மனிதர்களுக்குப் பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் இயல்புடையது. ஆனால் மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவாது. கால்நடை மற்றும் செம்மறி ஆடுகளுடன் தொடர்பு உடையவர்களுக்கு இந்நோய்ப் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்றும் தெரிவித்து உள்ளனர்.

இந்தப் புதிய தொற்றால் பாதிக்கப் பட்டவர்களுக்கு முதலில் காய்ச்சல் அடுத்து உடல்நலக் குறைவு, தலைவலி போன்ற குறைபாடுகள் ஏற்படும் என்றும் உரியச் சிகிச்சை எடுத்துக் கொள்ளாவிட்டால் இத்தொற்று மரணத்தை ஏற்படுத்தும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர்.

You'r reading சீனாவிலிருந்து மீண்டும் ஒரு வைரஸ் ! இது கொரோனாவை விட ஆபத்தானது ! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - செவிலியர் முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்