ஜப்பானில் வெள்ளப்பெருக்கு எதிரொலி: 76 பேர் பலி, பலர் மாயம்

ஜப்பானில் கடந்த மூன்று நாட்களாக பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில், சிக்கி இதுவரை 76 பேர் பலியாகி உள்ளனர்.

ஜப்பானின் தென்மேற்கு பகுதியில் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், அப்பகுதிகளில் பயங்கர வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, ஹிரோஷிமா, கியாட்டோ, ஒக்காயாமா, எஹிமே ஆகிய மாகாணங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால், கார், பேருந்துகள் பல வாகனங்கள் தண்ணீருக்குள் மூழ்கி உள்ளன. ஒரு சில பகுதிகளில் 16 அடி உயரம் வரையில் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. இதன் எதிரொலியாக 50 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளன.

இந்த வெள்ளக்காட்டில் சிக்கி இதுவரை 76 பேர் பலியாகி உள்ளனர். மேலும், காணாமல் போன 92 பேரை தேடும் பணிகளில் ராணுவம் மற்றும் பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக சுமார் 40 ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.

You'r reading ஜப்பானில் வெள்ளப்பெருக்கு எதிரொலி: 76 பேர் பலி, பலர் மாயம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ரயில் பயணிகள் இனி டிஜிட்டல் ஆவணங்களை காண்பித்தால் போதும்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்