ருவாண்டா நாட்டுக்கு 200 பசுக்களை பரிசாக வழங்கும் மோடி

ருவாண்டா நாட்டிற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டுக்கு 200 பசுக்களை பரிசாக அளிக்க இருக்கிறார்.

பிரதமர் மோடி ஐந்து நாள் சுற்றுப்பயணமாக ஆப்பிரிக்கா நாடுகளான ருவாண்டா, உகாண்டா, தென் ஆப்பிரிக்கா பயணம் செய்கிறார். இதற்காக, பிரதமர் மோடி டெல்லியில் இருந்து நேற்று புறப்பட்டார்.

கடந்த 20 ஆண்டுகளில் ருவாண்டா நாட்டுக்கு செல்லும் முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை பெருகிறார் மோடி.

இதற்கிடையே, ருவாண்டா அரசு, ‘குடும்பத்துக்கு ஒரு பசு’ என்ற திட்டத்தை ‘கிரிங்கா’ என்ற பெயரில் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில், இந்தியா சார்பில் இலவசமாக 200 பசுக்கள் வழங்க இருக்கிறார் மோடி. இங்கு நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் மோடி கலந்துக் கொள்ள இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் பிறகு, இன்று உகாண்டா செல்லும் மோடி அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றுகிறார்.

இதன்பிறகு நாளை, தென் ஆப்பிரிக்கா செல்கிறார். பின்னர், 5 நாடுகள் அங்கம் வகிக்கும் பிரிக்ஸ் நாடுகளின் 10வது உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்ள இருக்கிறார்.

You'r reading ருவாண்டா நாட்டுக்கு 200 பசுக்களை பரிசாக வழங்கும் மோடி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சிங்கங்களிடமிருந்து எஜமானை காப்பாற்றிய நாய்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்