பிரதமர் மோடி- ராகுல் காந்தி கிறித்துமஸ் வாழ்த்து

உலகம் முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுவதை அடுத்து, பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்பட பல்வேறு அரசியில் கட்சி தலைவர்கள் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

உலகம் முழுவதும் இயேசு பிரான் அவதரித்த தினமான டிசம்பர் 25 கிறிஸ்துமஸ் தினமாக கொண்டாடபட்டு வருகிறது. நேற்று நள்ளிரவு முதல் நாடு முழுவதும் உள்ள தேவாலயங்களில் கூட்டு பிரார்த்தனை சிறப்பாக நடைப்பெற்று வருகிறது.

இதனை ஒட்டி நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி, ட்விட்டர்-ல் தனது கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்

"இயேசு அவதரித்த தினமான இன்று அவர் அளித்த போதனைகளை நினைவில் கொள்வோம். அனைவர்க்கும் கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்", என பதிவிட்டுள்ளார்

இதே போல் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக சமீபத்தில் பதவி ஏற்றுள்ள ராகுல் காந்தியும் தனது கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

You'r reading பிரதமர் மோடி- ராகுல் காந்தி கிறித்துமஸ் வாழ்த்து Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அதிமுகவும், இரட்டை இலை சின்னமும் எங்களிடம் வரும் - தினகரன் ஆதரவாளர் அதிரடி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்