சவுதி அரேபியாவில் முதன்முறையாக பெண் செய்தி வாசிப்பாளர் நியமனம்

சவுதி அரேபியாவில் செய்தி வாசிப்பாளர் பணியில் முதல் முறையாக பெண் அமர்த்தப்பட்டுள்ளதால், பல தரப்பினரிடம் இருந்தும் வரவேற்பு பெற்றுள்ளது.

சவுதி அரேபியாவில் இளவரசர் முகமது பின் சல்மான் பதவி ஏற்ற பிறகு பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.
குறிப்பாக, பெண்களுக்கு கார் ஓட்ட அனுமதி, சினிமா தியேட்டர் என பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.

இந்நிலையில், அந்நாட்டில் உள்ள அல் சவுதியா என்ற தொலைக்காட்சி செய்தி சேனலில் வீம் அல் தஹீல் என்ற பெண்ணை வாசிப்பாளராக முதல் முறையாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதில் குறிப்பாக, அந்த தொலைக்காட்சியில் மாலை நேரத்தில் ஆண் வாசிப்பாளருடன் செய்தி வாசிக்க அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது.

அரசின் அனுமதிக்கு மகளிர் அமைப்புகள் உள்பட அந்நாட்டு பெண்களும், இஸ்லாமிய நாட்டு பெண்களும் பெரும் வரவேற்பு அளித்துள்ளனர்.

You'r reading சவுதி அரேபியாவில் முதன்முறையாக பெண் செய்தி வாசிப்பாளர் நியமனம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இந்தியா முழுவதும் நாளை ஆயுஷ்மான் பாரத் திட்டம் தொடக்கம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்