தீவிரமடையும் காய்ச்சல்: சீனாவில் 2 லட்சம் பன்றிகள் கொன்று குவிப்பு !

About 2 lakh pigs have been murdered to prevent swine flu in China

சீனாவில் பன்றிக்காய்ச்சல் பரவுவதை தடுக்க சுமார் 2 லட்சம் பன்றிகள் கொன்று குவிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் மட்டுமின்றி சீனாவிலும் பன்றிக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் ராஜஸ்தான், கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களிலும் பன்றிக்காய்ச்சலால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு, மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

உலகின் மிகப்பெரிய பன்றி இறைச்சி உற்பத்தியாளரான சீனாவிலும் பன்றிக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. நோய் பாதித்துள்ள மாகாணங்களில் இருந்து இறைச்சிக்காக பன்றிகளை பிற பகுதிகளுக்கு கொண்டுசெல்ல சுகாதாரத்துறை தடை விதித்துள்ளது.

இதன்எதிரொலியால், பன்றி இறைச்சி விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், சீனாவில் மொத்தம் 27 நகரங்களில் பன்றிக்காய்ச்சல் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில், 41 பேர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது ரத்த பரிசோதனைகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இதைதவிர, பன்றிக்காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது.

இதன்எதிரொலியால், பன்றி வளர்க்கும் பண்ணைகளில் பன்றிக்கு நோய் தாக்கப்பட்டுள்ளதா என ஆராய்ந்து, நோய் இருக்கும்பட்சத்தில் பன்றிகள் கொன்று குவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சீனாவில் உள்ள பண்ணைகளில் சுமார் இரண்டு லட்சம் பன்றிகள் கொன்று குவிக்கப்பட்டுள்ளது.

You'r reading தீவிரமடையும் காய்ச்சல்: சீனாவில் 2 லட்சம் பன்றிகள் கொன்று குவிப்பு ! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பரியேறும் பெருமாள் படத்தை பாராட்டிய ஷங்கர்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்