நடிகர் ராதாரவிக்கு டத்தோ பட்டம் கொடுக்கவில்லை- மலாக்கா அரசு

Radha Ravis datukship not from Melaka govt

நடிகர் ராதாரவிக்கு டத்தோ பட்டம் கொடுக்கவில்லை என மலேசியாவின் மலாக்கா மாநில அரசு தெரிவித்துள்ளது.

ராதாரவிக்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் மலாக்கா அரசு ‘டத்தோ’ பட்டம் கொடுத்ததாக கூறப்பட்டது. அண்மையில் மீடு விவகாரத்தால் டப்பிங் யூனியனில் இருந்து பாடகி சின்மயி நீக்கப்பட்டார்.

சின்மயி மீது ராதாரவி கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். இதற்கு பதிலடியாக ராதாரவிக்கு டத்தோ பட்டம் கொடுத்தது யார்? என புதிய பஞ்சாயத்தை கிளப்பினார் சின்மயி.

இந்நிலையில் மலாய் மெயில் பத்திரிகைக்கு பேட்டி அளித்துள்ள மலாக்கா முதல்வரின் சிறப்பு செயலாலர் பிரசாந்த் குமார் பிரகாசம், மலாக்கா அரசு ஆவணங்களில் ராதாரவி பெயரே இல்லை. நடிகர் ராதாரவி அந்த பட்டத்தை பெறவில்லை. சின்மயிக்கும் இத்தகவலை தெரிவித்திருக்கிறேன் என கூறியுள்ளார்.

You'r reading நடிகர் ராதாரவிக்கு டத்தோ பட்டம் கொடுக்கவில்லை- மலாக்கா அரசு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சென்னையில் அதிர்ச்சி: ரகசிய கேமரா பொருத்தி நோட்டமிட்டு வந்த பெண்கள் விடுதி உரிமையாளர் கைது

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்