பாதிப்பு இருப்பதை வாய்மொழியாக தெரிவித்த மருத்துவமனை.. பேட்மிண்டன் வீராங்கனை சாய்னாவிற்கு கொரோனா!

by Sasitharan, Jan 12, 2021, 20:46 PM IST

பிரபல இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று நாடு முழுவதும் பரவி பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், கடந்த 1 வருடங்களுக்கு பிறகு கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்து வருகிறது. இருப்பினும், இந்தியாவில் மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்களுக்கு கொரோனா தொற்று அவப்போது உறுதி செய்யப்பட்டு வருகிறது.

அந்த வகையில், தற்போது, பிரபல இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக சாய்னா தனது டுவிட்டர் பக்கத்தில் தனக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்ட வீடியோவை பதிவிட்டு, எனக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்ட பின்னர் அந்த முடிவுகளின் அடிப்படையில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், சாய்னாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதன் மூலம் பேங்காக்கில் உள்ள மருத்துவமனையில் 10 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அவருடன் பயணித்த மற்றொரு பேட்மிண்டன் வீரர் காஷ்யப்பும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இன்று ஆரம்பமாகி உள்ள தாய்லாந்து ஓபன் 2021 பேட்மிண்டன் தொடரில் சாய்னா விளையாட இருந்தார். ஆனால், கொரோனா உறுதியானதால், சாய்னா முதல் சுற்றில் வால்க் ஓவர் என பேட்மிண்டன் உலக கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இது குறித்து சாய்னா தெரிவிக்கையில், பரிசோதனை முடிவுகள் தனக்கு கொடுக்கப்படவில்லை எனவும், அதிகாரிகள் தான் தனக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை வாய்மொழியாக தெரிவித்ததாகவும் சாய்னா தெரிவித்துள்ளார்.

You'r reading பாதிப்பு இருப்பதை வாய்மொழியாக தெரிவித்த மருத்துவமனை.. பேட்மிண்டன் வீராங்கனை சாய்னாவிற்கு கொரோனா! Originally posted on The Subeditor Tamil

More Badminton News

READ MORE ABOUT :

அதிகம் படித்தவை