அட என்னடா,, கொரோனாவுக்கு வந்த சோதனை!! கொரோனா என்று பொய் சொல்லி, ஆம்புலன்சில் இருந்து கணவனுக்கு டாட்டா காட்டிய மனைவி

wife tortured by husband and brother in law

by Logeswari, Sep 27, 2020, 21:41 PM IST

கணவன் கொடுத்த கொடுமையை தாங்க முடியாமல் கொரோனா என்று பொய் சொல்லி ஆம்புலன்சை வரவழைத்து கணவனிடம் இருந்து தப்பித்த மனைவி.
பெங்களூருக்கு அருகே உள்ள பல்லிகே என்ற இடத்தை சேர்ந்த 28 வயது பெண், சேவை அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார்.இவரது கணவன் தினமும் கொடுமை படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.இதலில் இருந்து வெளியேற தனது தோழியிடம் யோசனை கேட்டு உள்ளார்.தோழி கொடுத்த யோசனைப்படி தனக்கு கொரோனா என்று பொய் கூறி ஆம்புலன்சை வரவழைத்து தப்பித்துள்ளார்.இந்த தந்திரத்தை அறியாத கணவன் மருத்துவமனைக்கு போன் செய்து தனது மனைவியின் உடல்நலத்தை பற்றி விசாரித்து உள்ளார்.மருத்துவமனையில் அப்படி யாரும் மருத்துவமனையில் சேர்க்கவில்லை என்று கூறியுள்ளனர்.


இதனால் தனது மனைவியை காணவில்லை என்று செய்தித்தாளில் விளம்பரத்தை கொடுத்துள்ளார்.அந்த விளம்பரத்தை பார்த்த அந்த பெண் தனது நண்பருக்கு போன் செய்து நான் காணாமல் போக வில்லை.எனது கணவரும் அவரது சகோதரும் சேர்ந்து கொடுத்த பாலியல் தொல்லையால் கொரோனா என்று பொய் சொல்லி ஆம்புலன்சை வரவழைத்து தப்பிவிட்டேன்.இனி அங்கு போக மனது இடம் கொடுக்கவில்லை என்ற திடுக்கிடும் தகவல்களை கூறியுள்ளார்.மனைவி தனது கணவனின் பெயரில் எந்தவித புகாரும் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>More Bangalore News

அதிகம் படித்தவை