பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து திடீரென்று வெளியேறிய பிரபலம்... டிவிஸ்ட்டுக்கெல்லாம் நாளை விடை தெரியும்..

Kamalhaasans BigBoss 4 season Final List Tomorrow

by Chandru, Oct 3, 2020, 16:49 PM IST

கடந்த 3 வருடமாக விஜய் டிவியில் நடிகர் கமல்ஹாசன் பிக்பாஸ் ஷோ நடத்தி வருகிறார். கொரோனா தொற்று காரணமாக இந்த ஆண்டு 4வது சீசன் நடக்குமா, நடக்காதா? என்ற சந்தேகம் எழுந்தது. கொரோனா தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்த நிலையில் பிக்பாஸ்4 வது சீசனுக்கு கமல் ஒகே சொன்னார். இதையடுத்து அதில் பங்கேற்கும் போட்டியாளர்கள் தேர்வு ரகசியமாக நடந்து வந்தது.

பிக்பாஸ்4 சீசன் பற்றி கமல்ஹாசன் 2 புரமோக்கள் நடித்து வெளியிட்டார். அது வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் போட்டியில் பங்கேற்பவர்கள் தேர்வு செய்யப்பட்டு ஸ்டார் ஒட்டல்களில் தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களும் யார், யார் என்பது ரகசியமாக வைக்கப்பட்டு வந்தது. அக்டோபர் 4ம் தேதி முதல் விஜய் டிவியில் பிக்பாஸ்4 நிகழ்ச்சி தொடங்க ஏற்பாடாகி வந்தது அதன்படி நாளை இரவு போட்டியாளர்கள் யார் என்ற அறிமுகம் நடக்கவிருக்கிறது.

போட்டியாளர்கள் இறுதி பட்டியல் என்ற பெயரில் ஒன்று நெட்டில் வலம் வந்தது. அதில் 16 பெயர்கள் இடம் பெற்றுள்ளன. அந்த பெயர் விவரம் வருமாறு:நடிகைகள் கடலோர கவிதைகள் ரேகா, சனம் ஷெட்டி, ரம்யா பண்டியன், ஷிவானி, கேப்ரில்லா, நடிகர்கள் சுரேஷ், ஆரி, ஜித்தன் ரமேஷ், ரியோ ராஜ், அனுமோகன், சூப்பர் சிங்கர் அஜீத், பாடகர் வேல்முருகன், டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் விஜே அர்ச்சனா, டிவி நடிகை அறந்தாங்கி நிஷா, பாலாஜி முருகதாஸ், மாடல் சோமேஷ்கர் ஆகியோரது பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

ஏற்கனவே நடிகைகள் லட்சுமி மேனன், கிரண் ஆகியோர் பெயர்கள் இடம் கூறப்பட்டாலும் அவர்கள் பெயர்கள் லீக் பட்டியலில் இடம் பெறவில்லை. தற்போது இதில் ஒரே பெயரில் இரண்டு நடிகர்கள் இருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியது. பன்னீர் புஷ்பங்கள் நடிகர் சுரேஷ் பங்கேற்க உள்ளதாகக் கூறப்பட நிலையில் அது அந்த சுரேஷ் இல்லையாம் இவர் லஷ்மி ஸ்டோர் டிவி சீர்யலில் நடிக்கும் சுரேஷ் என்று தெரிகிறது. இவர் சமையல் கலையிலும் வல்லவராம். அதேபோல் டிவி தொகுப்பாளினி பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைவதற்கு முன்பே விஜே அர்ச்சனா என்ன காரணத்தாலோ போட்டியிலிருந்து வெளியேறிவிட்டாராம். இப்பவே இப்படி தலையைச் சுற்றவைக்கும் திருப்பங்கள் கேள்விப்படும் நிலையில் நாளை நேரடியாக நடக்கவிருக்கும் அறிமுக நிகழ்ச்சியில் இதைவிட ஆச்சரியமூட்டும் என்ரிக்கள் என கூறப்படுகிறது.

More Bigg boss News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை