வந்த வேலையை சிறப்பாக தொடங்கிய சனம் ஷெட்டி ..முதல் டார்கெட் ஷிவானியா ??பிக் பாஸ் ப்ரோமோவில் வெளியான அதிர்ச்சி தகவல்

big boss 4 first day promo release

by Logeswari, Oct 5, 2020, 15:51 PM IST

சனம் ஷெட்டி மற்றும் சுரேஷ் இருவரும் சேர்ந்து ஷிவானியை டார்கெட் செய்வது போல வெளியான வீடியோ மக்களிடையே மிகவும் வைரலாகி வருகிறது.

மக்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டு இருந்த பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி நேற்று மாலை இனிதே மிகவும் பிரம்மாண்டமாக தொடங்கியது.பிக் பாஸ் நிகழ்ச்சியில் 16 பிரபலங்கள் கலந்து கொண்டு பிக் பாஸ் வீட்டுக்குள் சென்று நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.இதனை தலைமை தாங்கி உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கினார்.இந்நிகழ்ச்சி வெளி நடப்பு அறியாமல்,உறவினர்கள்,நண்பர்கள் யாரையும் சந்திக்காமல் 100 நாட்கள் மக்களின் மனதில் யார் இடம் பிடிக்கிறார்களோ அவர்கள் தான் வெற்றியாளர்கள்.


இந்நிலையில் இன்று முதல் நாளான ப்ரோமாவை தனியார் தொலைக்காட்சி வெளியிட்டது.அதில் வந்த முதல் நாளே சனம் ஷெட்டி தனது வேலையை சிறப்பாக தொடங்கிவிட்டார்.சனம் மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி இருவரும் ஷிவானியை டார்கெட் செய்வது போல சில காட்சிகள் வெளியாகியுள்ளது.இதனால் ஷிவானியின் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.இன்னொரு ப்ரோமோவில் பிக் பாஸ் வீட்டில் தினமும் காலையில் ஒலிக்கும் பாட்டுக்கு நடனமாடி முதல் நாளை இனிதே வரவேர்த்தனர்.அடுத்த ப்ரோமோவில் ஹவுஸ்மெட்ஸ் அனைவரும் கண்ணா பூச்சி விளையாட்டு விளையாடுவது போல காட்சிகள் வெளியிட்டது.பிக் பாஸ் ரசிகர்கள் இன்று இரவு என்ன நடக்கும் என்பதை மிகவும் எதிர்பார்த்து காத்து கொண்டு இருக்கின்றனர்.

More Bigg boss News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை