அனிதா சம்பத்தையே கோபப்பட வச்சிட்டாரே இந்த சுரேஷ் சக்கரவர்த்தி.. அப்படி என்ன நடந்தது?

big boss season 4 todays promo update

by Logeswari, Oct 6, 2020, 18:19 PM IST

தமிழில் பிக் பாஸ் சீசன் 4 இனிதே தொடங்கியது.முதல் நாளான நேற்று சில சுவாரசியமான காட்சிகள் இடம்பெற்றது.மக்கள் அனைவரும் முதல் நாளே இப்படி என்றால் நாட்கள் செல்ல என்ன நடக்கும் என்று ஆவலுடன் இருக்கிறார்கள்.முதல் நாளில் ஷிவானியை டார்கெட் செய்து சனம் ஷெட்டி மற்றும் சுரேஷ் சக்கரவர்த்தி ஆகிய இருவரும் பாதுகாப்பான முறையில் போட்டியை ஆரம்பித்தார்கள்.இரண்டாவது நாளான இன்று தனியார் தொலைக்காட்சி மூன்று ப்ரோமோக்களை வெளியிட்டது.

முதல் ப்ரோமோவில் நேற்று நிகழ்ந்த டாஸ்க் இன்றும் தொடர்கிறது.அதில் அனிதா சம்பத் அறந்தாங்கி நிஷாவை கண்டு தனது அம்மாவை பார்ப்பது போல இருக்கு என்று உருக்கமாக பேசியுள்ளார்.இதனை கேட்டு நெகிழ்ந்த நிஷா அனிதாவை பாசத்தோடு கட்டி அணைத்து கொள்கிறார்.அடுத்த ப்ரோமோ இதற்கு எதிர் மறையாக உள்ளது.எப்பொழுதும் குழந்தை போல அமைதியாக இருக்கும் அனிதா சம்பத் சுரேஷ் சக்கரவர்த்தியிடம் காரசாரமாக விவாதிப்பது போல காட்சிகள் எழுந்துள்ளது.யார் வம்பிக்கும் போக மாட்டார் என்று நினைத்த அனிதாவையே சீறி எழுப்பிவிட்டாரே என்று மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

More Bigg boss News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை