உலகப் புகழ்பெற்ற டிஸ்னி கம்பெனி 28 ஆயிரம் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப முடிவு..!

World-famous Disney Company Has decided to lay off 28 thousand employees

by Balaji, Oct 6, 2020, 18:39 PM IST

உலக அளவில் பிரபலமான சினிமா மற்றும் பொழுதுபோக்கு கம்பெனிகளில் ஒன்றான கலிபோர்னியாவைச் சேர்ந்த டிஸ்னி கம்பெனி கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக 28 ஆயிரம் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பத் திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் 67 சதவீதத்தினர் தற்காலிக ஊழியர்கள் ஆவார்கள் எத்தனை பேர் நிரந்தர பணி என்ற விவரங்கள் திருஷ்டியால் வெளியிடப்படவில்லை.

டிஸ்னி தீம் பார்க்குகள் மற்றும் கன்ஸ்யூமர் புரோடக்ட் ஆகியவற்றிலிருந்து இந்த நிறுவனத்திற்குக் கணிசமான வருவாய் வந்து கொண்டிருந்தது கடந்த ஆண்டில் 37 சதவீத வருமானம் இந்த இரு பிரிவுகளில் இருந்து கிடைத்துள்ளது.அதேசமயம் டிஸ்னி நிறுவனம் தனது தீம் பார்க்குகள் சிலவற்றையும் ஹோட்டல்கள் கப்பல் நிறுவனங்களை மூடி விட்டதால் இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் மட்டும் 3.5 பில்லியன் டாலர் நஷ்டத்தைச் சந்தித்துள்ளது.

கலிபோர்னியாவில் உள்ள தீம் பார்க்குகள் கொரானா காரணமாக மூடப்பட்டிருந்த போதிலும் பாரிஸ் ஷாங்காய் ஜப்பான் ஹாங்காங் புளோரிடா ஆகிய நகரங்களில் உள்ள வாக்குகள் திறக்கப்பட்டிருக்கிறது அங்கும் குறிப்பிட்ட அளவில் மட்டுமே பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். இப்படி பல்வேறு காரணங்களால் பெரும் நஷ்டத்தைச் சந்தித்து வரும் டிஸ்னி நிறுவனம் வேறுவழியின்றி பல்லாயிரக்கணக்கான ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

More World News

அதிகம் படித்தவை