உலகையே அச்சுறுத்திய ஹிட்லர் எதனால் தற்கொலை செய்தார் என்று தெரியுமா?

by Ari, Apr 30, 2021, 05:16 AM IST

20 ஆம் ஆண்டு மத்தியில் உலகையே அச்சுறுத்திய ஹிட்லர் இதே தினத்தன்று தற்கொலை செய்து கொண்டார். அவர் இறந்து இன்றோடு 76 ஆண்டுகள் கடந்துவிட்டன.

1889 ஆம் ஆண்டு ஏப்ரல் 20 ஆம் தேதி ஜெர்மனி - ஆஸ்திரிய எல்லையான பிரானோவில் அடால்ப் என்ற பெண்ணிற்கு பிறந்தவர் ஹிட்லர். இவரது இயற்பெயர், அலாய்ஸ் ஷிக்கெல்கிரபர். இது அவரது தாய்வழி குடும்பப் பெயர். ஹிட்லருக்கு பிறந்ததிலிருந்து அவருக்குத் தன் தந்தை யார் என்று தெரியாது. குழந்தை பிறப்புக்குப் பின் வேறொரு திருமணம் செய்து கொண்ட பிறகு ஜோஹன் ஜார்ஜ் ஹீட்லர் என்பவர் வளர்ப்புத் தந்தையானார்.

எல்லா கொடுமைக்காரத் தகப்பன்களின் மகன்களும் சர்வாதிகாரிகள் ஆவதில்லை. ஆனால் பெரும்பாலானா சர்வாதிகாரிகளின் தந்தைமார்கள் கொடுமைக்காரர்களாகவே இருந்திருக்கின்றனர். அப்பா என்றால் அடிப்பவர் என்ற பிம்பம் மனதில் பதியும் அளவிற்கு, வளர்ப்பு தந்தையால் கொடுமைகளை அனுபவித்துள்ளார் ஹிட்லர்.

தந்தையின் ஆசையை நிறைவேற்றி விடக்கூடாது என்பதற்காகவே, ஓவியனாக வேண்டும் என்று நினைத்த ஹிட்லர், சிறுவயதில் அடுத்தடுத்து பெற்றோரை இழந்து பிழைப்புக்காக ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவுக்குச் சென்றார். அங்கு முதல் முதலில் அவர் கண்ணில் பட்டது யூத இனம். பல்லாயிரக்கணக்கானோர் பசி பஞ்சத்தில் அவதிப்படும் போது, ஒரு யூத ஏழைக்கூட இல்லையே என யோசித்தார். இளம் வயதில், ஹிட்லரின் சிந்தனைப் போக்கில் மிகப்பெரிய தாக்கத்தை இது உண்டாக்கியது.

1914 ஆம் ஆண்டு முதல் உலக யுத்தத்தின் போது ராணுவத்தில் சேர்ந்தார் ஹிட்லர். போரில் ஜெர்மனி அடிவாங்கியது. ஆனால், அகண்ட ஜெர்மனி, "ஒரே நாடு ஒரே இனம்" போன்ற கனவு அவர் மனதில் தணல் போல் எரிந்துக் கொண்டே இருந்தது. யூத எதிர்ப்பைக் கொண்டிருந்த ஜெர்மன் தொழிலாளர் கட்சியில் இணைந்த ஹிட்லர், குறுகிய காலத்திலேயே தனது பேச்சுத் திறமையால் கட்சியின் தலைமைப் பொறுப்பைப் பெற்றார். கட்சியின் பெயரை நாஜி என மாற்றினார். அதாவது தேசிய சோஷலிஸ்ட் ஜெர்மன் தொழிலாளர் கட்சி என மாற்றினார்.

1932 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு ஹிட்லர் உட்பட 107 நாஜிக்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாகினர். இதையடுத்து, எதிர்க்கட்சியினரை விலைக்கு வாங்குவது, கொலை, சூழ்ச்சி, நாடாளுமன்ற தாக்குதல் நடத்திவிட்டு, அந்த பழியை கம்யூனிஸ்ட் மீது தூக்கி போடுவது என துவங்கி 1933-ம் ஆண்டில் அரசுக்கு எதிராக பெரிய புரட்சியை ஏற்படுத்தி அதிபர் பதவியை பறித்துக்கொண்டார். அந்த நொடி முதலே ஜனநாயகத்தைத் தூக்கி எறிந்து தன்னை ஜெர்மனியின் சர்வாதிகாரியாக அறிவித்தார் ஹிட்லர். தனதுக்கு எதிராக குரல் எழுப்பும் கட்சிகளை தடை செய்தார். ஊடகத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார்.

1935-ம் ஆண்டில் "நியூரெம்பர்க்" சட்டத் திருத்தம் மூலம் யூதர்களுக்கு வழங்கப்பட்ட எல்லா சலுகைகளையும் பறித்து, அவர்களை இரண்டாம் தர குடிமக்களாக அறிவித்ததோடு, ஒரு சட்டத்தை அமல்படுத்தினார். தங்களுக்கு முன் 3 தலைமுறை யூத இனத்தை சேர்ந்தவர்கள் இல்லை என்பதை நிருபிக்கும்படி குடியுரிமை சட்டம் அது.

1938 முதல் முதலில் ஆஸ்திரியா மீது படையெடுத்து அபகரித்த தினம் தொடங்கி தேச எல்லை விரிவடைந்துவிட 1939க்குப் பின் ஹிட்லரின் யூத ஒழிப்புத் திட்டம் இன்னொரு பரிமாணத்தைத் தொட்டது.

1940-ல் டென்மார்க்கையும், நார்வையும் கைப்பற்றினார். அடுத்த வரும் பிரான்ஸ், பெல்ஜியம், ஹாலந்து, யூகோஸ்லாவியா, கிரீஸ் கைப்பற்றினார். கைப்பற்றிய பிராந்தியங்களிலும் யூத ஒழிப்பு மட்டுமே முதல் நடவடிக்கையாக இருந்தது.

குடியுரிமைய நிருபிக்க தவறுபவர்களை குடும்பம், குடும்பமாக லாரியில் ஏற்றி முகாம்களில் அடைத்தார். ஜெர்மனியில் மட்டுமின்றி தான் கைப்பற்றும் நாடுகளில் இருக்கும் யூதர்களையும் கூட்ஸ் ரயில், லாரி, கண்டெய்னர் பெட்டி உள்ளிட்டவைகளில் ஆயிரக்கணக்கானோரை அடைத்து முகாம்களுக்கு அனுப்பினர். அதில் பாதிபேர் வரும் வழியிலேயே மூச்சு தினறி உயிரிழந்தனர். எஞ்சியவர்களை தினம்தோறும் எண்ணிக்கையில் அடிப்படையில், கொதிக்கும் நீரில் தள்ளியும், வெறிநாய்களை கொண்டு கடிக்க வைத்தும், துப்பாக்கியால் சுட்டும், சிறிய அறையில அடைத்து விஷ வாயுவை செலுத்தியும், விஷ ஊசி போட்டும் வித விதமாக கொன்று குவித்தனர் ஹிட்லர் சாகாக்கள்.

மனித குல சரித்திரத்தில் ஹிட்லர் மேற்கொண்ட யூதப் படுகொலைகளைப் போல் உக்கிரமான இன்னொரு இனப்படுகொலைச் சம்பவம் கிடையாது. 60 லட்சம் யூதர்கள் கொலை செய்யப்பட்டனர். 50 லட்சம் பேர் அகதிகளாக அலையவிடப்பட்டனர்.

தன்னை வெல்ல யாரும் இல்லை இறுமாப்பில் இங்கிலாந்து, பிரான்ஸ் மீது படையெடுத்து இரண்டாம் உலகப் போருக்கு பிள்ளையார் சுழி போட்டார்.

இதையடுத்து ஒருங்கிணைந்த இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்யா ஆகிய நேச நாடுகளிடம் ஹிட்லரின் சாகசங்கள் பலிக்கவில்லை.

1945 ஆண்டு ஏப்ரல் 28 ஆம் தேதி பெர்லின் நகருக்கு அருகே ரஷ்ய படைகள் முன்னேறி வர, கோட்டையின் பதுங்கு அறையில் வைத்து தனது 3 வது காதலியான ஈவா பிரானை ஆரவாரம் இன்றி திருமணம் செய்து கொண்டார்.

ஏப்ரல் 30 ஆம் தேதி ரஷ்ய படைகள் கோட்டைக்கு சற்று தொலைவில் வந்தபோது, தனது அறைக்கு சென்ற ஹிட்லர், ஈவாவிற்கு சைனைடு குப்பியை கொடுத்து வழியனுப்பிவிட்டு, அடுத்த சில வினாடிகளில் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அன்றைய தினம் 12 ஆண்டுகள் ஐரோப்பாவை அச்சுறுத்திய அவரின் ஆட்டம் முடிவடைந்ததோடு, அடுத்த சில வாரங்களில் 2 ஆம் உலகப்போரும் முடிவுக்கு வந்தது.

You'r reading உலகையே அச்சுறுத்திய ஹிட்லர் எதனால் தற்கொலை செய்தார் என்று தெரியுமா? Originally posted on The Subeditor Tamil

More Special article News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை