கொத்து கொத்தாக உயிர்கள் மடியும் சூழலில் IPL கொண்டாட்டம்

by Ari, Apr 27, 2021, 21:05 PM IST

இந்தியாவில் நாள் ஒன்றுக்கு 3.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் இரண்டாயிரத்தை கடந்து செல்கிறது. இதனிடையே கொரோனா நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர் கிடைக்காமல் மாண்டுபோகின்றனர். மயனாங்களில் ஒரு மணித்துளி இடைவேளை இன்றி நூற்றுக்கணக்கான சடலங்களை எரிக்க, புதைக்க இடம் இன்றி உறவினர்கள் தவித்து வருகின்றனர். மயானங்களில் டோக்கன் போட்டு சடலங்கள் எரிக்கப்படும் அளவிற்கு கொத்து கொத்தாக உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

கொரோனா தொற்று காரணமாக பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு, முழு நேர ஊரடங்கு மற்றும் 144 தடை உத்தரவு என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனிடையே வழிபாட்டு தளங்களில் பொதுமக்கள் வழிபாடு நடத்த தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த கால சூழலில், இந்தியாவில் ஐபிஎல் போட்டிகள் கோலாகலமாக நடந்து கொண்டிருப்பது கடும் விமர்சனத்தை உருவாக்கியுள்ளது.

“ஐபிஎல் தொடர் பொருத்தமற்றதாகத் தோன்றவில்லையா அல்லது மக்களைத் தொற்றிலிருந்து திசைதிருப்பவே இந்தப் போட்டிகள் நடத்தப்படுகின்றனவா? எதுவாக இருந்தாலும் இந்தியர்களுக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன்” என ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் கில்கிறிஸ்ட் ட்வீட் செய்துள்ளார்.

மேலும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது பெற்றுள்ள அபினவ் பிந்த்ரா-வும் இப்போதைய சூழலில் இந்த ஐபிஎல் கொண்டாட்டங்கள் தேவையா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார்.

இந்திய மக்கள் கொரோனா பெருந்தொற்று காரணமாக உயிரை கையில் பிடித்து இருக்கும் வேலையில், ``ரோம் நகரம் பற்றி எரியும்போது நீரோ மன்னன் பிடில் வாசித்தான்என்பதைப் போல் இந்தியாவில் தற்போது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெறுவது விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

You'r reading கொத்து கொத்தாக உயிர்கள் மடியும் சூழலில் IPL கொண்டாட்டம் Originally posted on The Subeditor Tamil

More Special article News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை