பூவுலக நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜன் கொரோனா குறித்து சில தகவல்களை சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில், “கடந்த 1984 ஆம் ஆண்டு முதல் 2018 வரை, நிபா, எபோலா,எய்ட்ஸ் போன்ற விலங்கியல் நோய்களால் உலகம் முழுவதும் 3.25கோடி மக்கள் உயிரிழந்துள்ளனர், இதில் கோவிட்19 நோயால் இறந்தவர்களையும் சேர்த்தால் இன்னும அதிகமாகும்.
கிருமிகளால் மனிதர்கள் சந்திக்க கூடிய நோய்களில் சுமார் 70% விலங்கியல் கிருமிகள். பெரிய அம்மை, போலியோ போன்ற நோய்களுக்கும் கோவிட் போன்ற விலங்கியல் நோய்களுக்கும் உள்ள வேறுபாடே “பிறழ்ச்சிதான்”. விலங்கில் நோய்கள் என்பதால், தடுப்பூசியோ குணப்படுத்தும் மருந்தோ கண்டுபிடிக்கப்பட்டால் கூட வேறு விலங்களிடம் சென்று மறைத்துக் கொண்டு வேறு ஒரு கிருமியாக பிறழ்வு ஏற்பட்டு மீண்டும் நம்மைத் தாக்கும்.
அமெரிக்காவைச் சேர்ந்த @USAIDGH உள்ளிட்ட அமைப்புகள், உலகளவில் பல்வேறு உயிரினங்களில் உள்ள வைரஸ்களை கண்டறிந்து சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியிட்டது.அந்த அறிக்கையின் படி, சுமார் 17லட்சம் வைரஸ்கள் பல்வேறு உயிரினங்களில் ஒளிந்துகொண்டுள்ளதை தெரிந்து கொள்ளமுடிகிறது.
அவற்றுள் சுமார் 6,31,000 முதல் 8,27,000 வரை மனிதர்களை தாக்கும் வாய்ப்புள்ளதாக“பல்லுரியம் மற்றும் சூழல் சேவைகளுக்கான சர்வதேச அமைப்பு”தெரிவித்துள்ளது.
இதற்கு அடிப்படை காரணமே காட்டுயிர்களின் வாழ்விடங்கள் அழிக்கப்படுவதுதான்.காடுகளை காப்பதுதான் நம்முன்னால் உள்ள தீர்வு”.
- சுந்தர்ராஜன், பூவுலக நண்பர்கள் அமைப்பு -