தமிழக நிலவியலின் அமைப்பு படி ஏப்ரல், மே மாதங்கள் கோடை காலமாக காணப்படுகின்றது. குறிப்பிட்ட இந்த மாதங்களில் மட்டும் கோடை வெப்பத்தின் தாக்கம், 40 முதல் 45 டிகிரி செல்சியஸ் வரை உணரப்படுவது வழக்கம்.
காற்றின் வெப்பநிலை, ஈரப்பதத்தை வைத்து தான் வெப்பநிலையை வானிலை ஆய்வு மையம் கணக்கிடுகிறது.
காற்றில் ஈரப்பதம் 50 விழுக்காடுக்கு மேல் செல்லும்போது, குறைந்தளவு வெப்பநிலையே இருந்தாலும் 42 டிகிரி வெப்பநிலை இருப்பது போல உணர வைப்பதாகவும், இரவு நேரங்களில் வரும் வியர்வை ஆவியாகாமல் உடலிலே தங்கி விடுவதால், அதிக வெப்பநிலை உள்ளது போல் மக்களுக்கு தோன்றுவதாக ஆய்வில் கூறப்படுகிறது.
அதிகபட்சம், குறைந்தபட்சம், உலர் விளக்கை, ஈரமான விளக்கை என்ற நான்கு அளவுகோள்கள் மூலம் வெப்பநிலை அளவிடப்படுகிறது. இதில் அதிகபட்சம் என்ற அளவுகோளில் மட்டும் காலை 8.30 மணியளில் Alcohol நிரப்பப் பட்டு, மாலை 5.30 மணிவரை வெப்பநிலை அளவிடப்படும். மேலும் காற்றில் உள்ள வெப்பநிலை, ஈரப்பதம் இரண்டும் தனித் தனியே கிராப் பேப்பர் மூலமாக, ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை அளவுகள் குறிக்கப்பட்டு இதன் மூலம் வெப்பநிலை மாற்றம் கணிக்கப்படுகிறது.