வில்லேஜ் குக்கிங் சேனலை சுப்பிரமணியன், அய்யனார், முருகேசன், தமிழ்ச்செல்வன், முத்துமாணிக்கம் என்ற சகோதரர்களோடு தாத்தா பெரிய தம்பி நடத்தி வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு பெரிய தம்பி தாத்தாவின் உடல்நிலை சரியில்லாமல் போயிருந்தது. அவருக்கு இதய அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டிருந்தது. இப்போது, அதில் இருந்து குணமடைந்துள்ளர்.
இந்த நிலையில் சமீபத்தில் அவர் ஒரு வீடியோவில் தன்னுடைய வாழ்நாளில் மறக்க முடியாது சம்பவம் என்று கூறி உணர்வுபூர்வமாக பேசி இருக்கிறார். அதாவது கடந்த ஜனவரி மாதம் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மயோபதி மருத்துவமனைக்கு தாத்தா சென்றுள்ளார். இந்த மயோபதி மருத்துவமனை நடிகர் நெப்போலியனால் கட்டப்பட்டது தான். நெப்போலியனின் மகன் தனுஷ் தசை சிதைவு நோயல் பாதிக்கப்பட்டவர். அவருக்கு நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் பகுதியில் பாரம்பரிய முறைப்படி சிகிச்சை அளிக்கப்பட்டது.
தனது மகனை போல பாதிக்கப்பட்ட சிறார்களுக்கு சிசிச்சை அளிக்கும் வகையில், இந்த மருத்துவமனையை நெப்போலியன் கட்டி கொடுத்துள்ளார். இங்கு, சிகிச்சை பெறும் குழந்தைகளுக்கு உணவு சமைத்து கொடுக்க பெரியதம்பி தாத்தா 7 மாதங்களுக்கு முன்பு சென்றுள்ளார். அப்போது, ரோகித் என்ற சிறுவனை அவரது அப்பா தூக்கிக் கொண்டு வந்ததை பார்த்துள்ளார். நடக்க முடியாத நிலையில், இருந்த அந்த சிறுவனை பெரியதம்பி தாத்தா 5 மாதத்தில் நீ நடந்து விடுவாய் என்று வாழ்த்தியுள்ளார். தாத்தாவின் வாழ்த்து பலித்தே விட்டது. 5 மாதத்தில் ரோகித் நடக்க ஆரம்பித்து விட்டான். இந்த தகவல் பெரிய தம்பி தாத்தாவுக்கு கிடைத்ததும் ஓடோடி போய் நேரில் ரோகித்தை சந்தித்து மனம் மகிழ்ந்துள்ளார்.