மண்ணுக்குள் புதைந்த கோவிலை மீட்க மன்னர் வருகை: நெல்லை அருகே சுவாரசியம்

Advertisement

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் தான் மன்னராக இருந்தபோது கட்டிய கோயில் பூமிக்கடியில் புதைந்து விட்டது. அதை மீட்க வேண்டுமென்று வாலிபர் ஒருவர் வந்து பரபரப்பை ஏற்படுத்தினார்.தூத்துக்குடி மாவட்டம் கொங்கராயகுறிச்சியில் ஆற்றுப் பகுதிக்கு நேற்று இளைஞர் ஒருவர் வந்தார்.கூடவே நாலு பேரை அழைத்து வந்திருந்த அவர், இங்கே குழி தோண்டுங்கள் என்று அவர்களுக்கு உத்தரவிட்டார். என்ன ஏது என்று கேட்காமல் நால்வரும் வேகவேகமாக குழி வெட்ட ஆரம்பித்தனர்.யாரோ ஒருவர் வந்து ஆற்றுப் பகுதியில் குழி தோண்டிக் கொண்டு இருக்கிறார் என்ற தகவல் உள்ளூர்க் தலையாரி தெரியவந்தது. அங்கே ஓடி வந்த அவர் குழி தோண்டுவதை நிறுத்த செய்துவிட்டு ஶ்ரீவைகுண்டம் தாசில்தாருக்கு போன் மூலம் தகவலைச் சொன்னார்.

தாசில்தாரும் ஜீப்பை எடுத்துக்கொண்டு கொண்டு வேக வேகமாக அங்கு வந்தார். குழி வெட்டச் சொன்ன நபரை அழைத்து விசாரித்தார்.அப்போது அந்த வாலிபர் தான் நெல்லை மாவட்டம், ரெட்டியார் பட்டி இந்த கிராமத்தைச் சேர்ந்த சுந்தர கண்ணன்(37) என்று சொன்னார். ஆட்டோ டிரைவரான இவருக்கு திடீரென பூர்வ ஜென்ம நினைவு வந்ததாம். அதன்பின் கொங்கராயகுறிச்சிக்கு வந்த அவர் இது தான் நான் ஆட்சி புரிந்த நாடு. இந்த இடத்தில்தான் நான் கோயில் கட்டி இருந்தேன் அந்த கோவில் இப்போது ஆற்று மணலில் புதைந்து விட்டது. அதை மீட்கத் தான் குழி தோண்டச் சொன்னேன் என்று தாசில்தாரிடம் விளக்கம் அளித்தார்.

முறைப்படி மத்திய அரசு அனுமதி கொடுத்தால் மட்டுமே குழி தோண்ட முடியும். மீறித் தோண்டினால் உங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தாசில்தார் எச்சரித்ததும். கண்ணன் குழியை மூடி விட்டார்.இதையடுத்து கண்ணன் ஆத்தங்கரை இல்லையே திடீர் பிரஸ்மீட் நடத்தினார் நிருபர்களிடம் அவர்,ஆயிரம் வருடங்களுக்கு முன்பு பான் ஸ்ரீவைகுண்டத்தினை தலைமையிடமாகக் கொண்டு இந்த நாட்டை ஆட்சி செய்து இருக்கிறேன். மன்னராக இருந்தபோது எனக்கு என்ன பெயர் என்பது இப்போது நினைவில்லை. ஆனால் என் மனைவி பெயர் சுந்தரி. எனக்கு அண்ணன் ஒருவரும் உண்டு. என்னுடைய காலத்தில் தஞ்சை பெரிய கோயில் கட்டப்பட்டது. அந்த கோயிலைக் கட்டிய ராஜராஜ சோழன் எனக்கு நண்பர் நண்பர். அவர் கட்டிய கோயிலைப் பார்த்ததும் நமது நாட்டிலும் இப்படி ஒரு கோயில் கட்ட வேண்டும் என்று தோன்றியது. அதன் விளைவாகத்தான் இந்த இடத்தில் கோயிலைக் கட்டினேன். தஞ்சாவூர் கோயில் கும்பாபிஷேகத்திற்குச் செல்ல நான் என் மனைவியுடன் கிளம்பும் போது, என்னை ஒரு தலையாகக் காதலித்த எனது அரண்மனை பணிப்பெண் ஒருத்தி எங்கள் இருவரையும் விஷம் வைத்துக் கொன்று விட்டாள்.

நான் உயிரோடு இருந்திருந்தால் இந்த கோயிலுக்கும் கும்பாபிஷேகம் செய்திருப்பேன். எனக்குப் பிறகு கோயிலை யாரும் கவனிக்காததால் கோயில் அப்படியே மண்ணுக்குள் புதைந்துபோய் விட்டது.சில நாட்களுக்கு முன்பு எனக்குப் பூர்வஜென்ம நினைவு வந்தது. அதைத் தொடர்ந்து நான் கட்டிய கோவில் எப்படி இருக்கும் எப்படி இருக்கிறது என்று பார்க்க வந்த போதுதான் அது மண்ணுக்குள் புதைந்து விட்டதை அறிந்தேன்.இது குறித்து ஆதிச்சநல்லுார் அகழாய்வு செய்யும் ஆராய்ச்சியாளர் பாஸ்கரன் இடம் சென்று தகவல் சொன்னேன். அவர் அடுத்த முறை வரும் போது உங்களிடம் ஆலோசனை செய்து கொள்ளலாம் என்று கூறினார். ஆனால் இந்த பூமிக்கடியில் நான் கட்டிய கோவில் இருப்பது மட்டும் உண்மை என்றார்.

Advertisement
மேலும் செய்திகள்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
7-people-surrender-in-priest-murder-case-in-nellai-sudalaimada-swamy-temple-crime
நெல்லை கோயில் பூசாரி கொலை வழக்கில் 7 பேர் சரண்
kalakkad-near-country-bombs-5-people-arrest
14 வயது சிறுவனை கொலை செய்ய முயற்சி – நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்…
welcome-poster-for-sasikala-nellai-aiadmk-executive-terminated
சசிகலாவை வரவேற்று போஸ்டர்: நெல்லை அதிமுக நிர்வாகி நீக்கம்
heavy-rains-in-nellai-district-floods-in-tamiraparani
நெல்லை மாவட்டத்தில் கனமழை: தாமிரபரணியில் வெள்ளம் மணிமுத்தாறு அணை திறப்பு
king-s-visit-to-recover-buried-temple-impressive-near-nellai
மண்ணுக்குள் புதைந்த கோவிலை மீட்க மன்னர் வருகை: நெல்லை அருகே சுவாரசியம்
crop-grazing-fence-police-stole-bike
பயிரை மேய்ந்தது வேலியாம்.. பைக்கை திருடியது போலீசாம்..
corporation-expropriates-land-family-struggles-over-water-tank-in-nellai
நிலத்தை அபகரித்து மாநகராட்சி : நெல்லையில் வாட்டர் டேங்க் மீதேறி குடும்பமே போராட்டம்
a-loving-couple-who-sold-their-baby-because-of-poverty
வறுமையின் காரணமாக குழந்தையை விற்ற காதல் தம்பதியர்
selfie-on-top-of-a-train-engine-the-boy-who-died-in-nellai
ரயில் எஞ்ஜின் மேல் செல்ஃபி: நெல்லையில் உயிரிழந்த சிறுவன்

READ MORE ABOUT :

/body>