சசிகலாவை வரவேற்று போஸ்டர்: நெல்லை அதிமுக நிர்வாகி நீக்கம்

by Balaji, Jan 27, 2021, 14:32 PM IST

திருநெல்வேலி மாநகர் முழுவதும் சசிகலாவை வரவேற்று போஸ்டர் அடித்து ஒட்டிய ஒட்டிய மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் சுப்பிரமணிய ராஜா அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு இருக்கிறார். நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளனர் திருச்சிக்கு அவப்பெயரை உண்டாக்கும் வகையில் செயல்பட்டு உள்ளதால் இவர் அடிப்படை பொறுப்பிலிருந்து நீக்கப்படுகிறார். அவருடன் கட்சியினர் யாரும் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சசிகலாவுக்கு ஆதரவாகக் களமிறங்கும் என்ற மாவட்ட நிர்வாகி ஒருவரே கட்சியைவிட்டு நீக்கப்பட்டது அதிமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

You'r reading சசிகலாவை வரவேற்று போஸ்டர்: நெல்லை அதிமுக நிர்வாகி நீக்கம் Originally posted on The Subeditor Tamil

More Tirunelveli News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை