கண்ணீர் விட வைக்கும் படம் பார்க்க விரும்பிய நடிகை.. பிரபல நடிகர் சொன்ன சினிமா..

Advertisement

அந்த காலத்து சினிமாக்கள் ரசிகர்களுக்குத் தன்னம்பிக்கை, உழைப்பு, நேர்மை, விஸ்வாசம், கடமை, தாய்ப் பாசம், குடும்ப பாசம், அண்ணன் தங்கை பாசம், பக்தி நெறி, வரலாறு என பல்வேறு சிந்தனைகளைப் போதித்தது. எம் ஜி ஆர் நடித்த பல படங்கள் கடமை, கண்ணியம் கட்டுப்பாடு, சிவாஜி நடித்த பல படங்கள் குடும்ப பாசம், அண்ணன் தங்கை பாசம் போன்ற போதனைகளை வழங்கியது இன்றைய காலத்தில் அதுபோன்ற படங்கள் வருவது குறைந்து விட்டது. அத்திப்பூத்தார் போல் ஒரு சில படங்கள் எப்போதாவது வருகிறது.மற்றபடி ரவுடி, தாதா கதைகள், கொலை, கொள்ளை. திகில், பொழுதுபோக்கு, அடல்ட் படங்கள் என வெவ்வேறு பாணியில் படங்கள் வருகின்றன. நடிகர், நடிகைகளும் ரவுடியாகவும் தாதாவாகவும் போலீஸை அடித்து ஹீரோயிசம் செய்வது போலவும் நடிக்க எண்ணுகின்றனர். இன்னும் சில காலம் போனால் பந்த பாசம் என்றால் என்று கேட்டும் அளவுக்கு இயந்திர கதியாக சினிமாவும் மாறி வருகிறது.

பாசமலர், துலாபாரம் என்று பல படங்கள் அந்த காலத்தில் பெண்களை மட்டுமல்லாமல் ஆண்களையும் தியேட்டரில் கண்கலங்கி கண்ணீர் சிந்த வைத்த படங்கள். இப்போதெல்லாம் சினிமாவை பார்த்து ரசிகர்கள் யாரும் கண்கலங்குவது போல் தெரியவில்லை.நடிக்க வரும் நட்சத்திரங்களும் ஹாலிவுட் படங்களைப் பார்த்து விட்டு நடிக்க வருகிறார்கள். நடிகை ரைசா வில்லன். பிக்பாஸில் பங்கேற்று பிரபலம் ஆனவர். பிறகு, பியார் பிரேமா காதல் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தார். மார்டன் கேர்ளாக அப்படத்தில் நடித்திருந்தார்.

இவர் இணைய தளம் மூலம் ரசிகர்களுடன் தொடர்பில் இருக்கிறார். அவருக்கு திடீரென்று ஒரு ஆசை தோன்றியது. கதறி அழவைக்கும் படம் பார்க்க வேண்டும். உங்களுக்கு தெரிந்த படங்கள் இருந்தால் சொல்லுங்கள் எனக் கேட்டிருந்தார். ரைசாவின் வித்தியாசமான இந்த கேள்வி ரசிகர்களை ஈர்த்தது. பல ரசிகர்கள் ஹாலிவுட் படம் தொடங்கி பல்வேறு மொழிப்படங்களின் பெயர்களை அவருக்குப் பார்க்கச் சிபாரிசு செய்தனர். அந்த பட்டியலில் நடிகர் விவேக்கும் ஒரு கருத்து தெரிவித்தார். சிவாஜி கணேசன் சார் நடித்த பாபு படத்தைப் பாருங்கள் கடைசியில் நீங்கள் அழுவதைத் தவிர்க்க முடியாது என்றார். விவேக் சொன்ன யோசனையை ஏற்ற ரைசா, நன்றி சார் இன்றே அந்த படத்தைப் பார்க்கிறேன் என்று பதில் அளித்தார்.ரைசா தற்போது தமிழில் தி சேஸ், அலைஸ், காதலிக்க யாருமில்லை, எஃப் ஐ ஆர், ஹேஷ்டேக் லவ் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?

READ MORE ABOUT :

/body>