ஊரடங்கு காலத்தில் உருக்குலைந்த இந்தியப் பொருளாதாரம் : ஆக்ஸ்போம் நிறுவன ஆய்வில் அதிர்ச்சி விவரங்கள்

by Balaji, Jan 27, 2021, 16:56 PM IST

கொரோனா வைரஸ் - உலகையே ஆட்டிப்படைத்த ஒரு அபூர்வ வஸ்து. உலகின் எல்லா நாடுகளிலும் குறிப்பாக இந்தியாவின் பெரும் செல்வந்தர்கள் மற்றும், கோடிக்கணக்கான தொழிலாளர்களுக்கும் இடையேயான வருமான ஏற்றத்தாழ்வுகளை மேலும் மோசமாக்கியுள்ளது. ஏற்கனவே இந்திய மக்களில் கோடிக்கணக்கானோர் பல ஆண்டுகளாகவே சரியான வேலை வாய்ப்பின்றி தவித்து வருகின்றனர்
அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூட அவர்கள் போராட வேண்டியிருக்கிறது. என்று சொல்கிறது ஆக்ஸ்பாம், என்ற அமைப்பு.

உலக நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்குப் பிறகு ஏற்பட்டுள்ள வேலை இழப்பு, வருமான இழப்பு மக்களின் வாழ்க்கைத் தரம் ஆகியவற்றை ஆய்வு செய்திருக்கிறது ஆக்ஸ்பாம் என்ற தன்னார்வ நிறுவனம்.சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடந்த உலக பொருளாதார கவுன்சிலில் இந்த அமைப்பு ஒரு ஆய்வறிக்கையைத் தாக்கல் செய்திருக்கிறது. 2020 ஏப்ரல் மாதத்தில் மட்டும் பொது முடக்கத்தின்போது இந்தியாவில் பெரும் செல்வந்தர்களின் வருவாய் 35 சதவிகிதம் அதிகமாகியுள்ளது.

அதே நேரத்தில் 84 சதவீத குடும்பத்தினர் பல்வேறு வகைகளில் தங்களது வழக்கமான வருவாயைக் கூட இழந்துள்ளனர். ஒவ்வொரு மணிக்கும் 1.7 லட்சம் பேர் வேலை இழந்ததாகச் சுட்டிக் காட்டியிருக்கிறது அந்த நிறுவனத்தின் அறிக்கை.பொது முடக்கம் தொடங்கிய 2020 மார்ச் மாதத்தில் நாட்டின் அதிகபட்ச வருமானம் கொண்ட 100 பில்லியனர்களுக்குகான வருமான அதிகரிப்பு என்பது 138 மில்லியன் ஏழைகள் ஒவ்வொருவருக்கும் 94,045 ரூபாய் வழங்கக் கூடிய அளவில் இருந்தது என்று அந்த நிறுவனம் கணக்கிட்டுள்ளது.

நாட்டின் டாப் 11 பில்லியனர்களுக்கு இந்த காலகட்டத்தில் உயர்ந்த வருமான வரி வருமான அதிகரிப்பிற்காக ஒரு சதவீதம் வரி விதிக்கப்பட்டிருந்தால் கூட அரசுக்குப் பல கோடி ரூபாய் வருமானம் கிடைத்திருக்கும். மக்களுக்குத் தரமான மருந்துகளை மலிவு விலையில் கிடைக்கச் செய்யும் வாய்ப்பு இப்போது இருப்பதை விட 150 மடங்கு அதிகரிக்கும். என்றும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டி இருக்கிறது.

மார்ச் 18 முதல் டிசம்பர் இறுதி வரை உலகளவில், கோடீஸ்வரர்களின் வருமானம் 3.9 டிரில்லியன் டாலர் வரை கூடியிருக்கிறது அதே சமயம். . அதே நேரத்தில் வறுமையில் திண்டாடும் மக்களின் எண்ணிக்கை 200 மில்லியனிலிருந்து 500 மில்லியானக அதிகரித்து இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. உலகின் 10 பணக்கார கோடீஸ்வரர்களில் வருவாய் பெருக்கம் உலகில் உள்ள அனைத்து மக்களும் வைரஸ் பிடியில் சிக்கி வறுமையில் விழுவதைத் தடுக்கவும், உலக மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடக்கூடிய போடுவதற்கு ஆகும் செலவுக்கு நிகரானது என்று அந்நிறுவனம் கணக்கிட்டுள்ளது.

இந்த அதீத வேறுபாடுகளைக் களைவதற்கு இந்திய அரசுக்கு ஆக்ஸ்பாம் நிறுவனம் சில பரிந்துரைகளை அளித்திருந்தது அதன்படி குறைந்தபட்ச ஊதியங்களைத் திருத்தி, முறையான இடைவெளியில் ஊதியத்தை உயர்த்த வேண்டியது அவசியம் என்பது முதன்மையானது.50 லட்சத்துக்கு மேல் வருவாய் ஈட்டுபவர்களுக்கு இரு மடங்கு கூடுதல் வரி விதிக்கவும், ஊரடங்கு காலத்தில் அதிக லாபம் ஈட்டிய நிறுவனங்களுக்குத் தற்காலிக வரியை அறிமுகப்படுத்தலாம் என்பதும் பரிந்துரைகளில் முக்கியமான ஒரு அம்சம்.

ஒளிமயமாக்க ஒரு எதிர்காலத்தை உருவாக்க இந்திய அரசாங்கம் சில குறிப்பிட்ட மற்றும் உறுதியான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும். காரணம் தங்களது நிலை குறித்துச் சத்தம்போட்டுச் சொல்வதற்குக் கூட சக்தியின்றி ஏழை மக்கள் நியாயமான எதிர்காலத்தை எதிர்பார்த்தபடி உள்ளனர் என்று அந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

You'r reading ஊரடங்கு காலத்தில் உருக்குலைந்த இந்தியப் பொருளாதாரம் : ஆக்ஸ்போம் நிறுவன ஆய்வில் அதிர்ச்சி விவரங்கள் Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை