இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?

by Madhavan, May 5, 2021, 19:44 PM IST

தமிழகத்தில் நாளை முதல் புதிய கட்டுபாடுகள் அமலுக்கு வருகின்றன. இதில் எது இயங்கும் எது இயங்காது என்பது குறித்து பார்ப்போம்.


எவை இயங்கும்? எவை இயங்காது?

1. அனைத்து திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், கேளிக்கைக் கூடங்கள், அனைத்து மதுக்கூடங்கள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள் போன்ற பொது மக்கள் அதிகம் கூடும் இடங்கள் இயங்க அனுமதி இல்லை

2. அனைத்து அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்களும் அதிகபட்சம் 50% பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது.

3. பயணியர் இரயில், மெட்ரோ ரயில், தனியார் பேருந்துகள், அரசு பேருந்துகள் மற்றும் வாடகை டாக்ஸி ஆகியவற்றில் 50 % இருக்கைகளில் மட்டும் பொதுமக்கள் அமர்ந்து பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

4.பெரிய கடைகள், வணிக வளாகங்கள் இயங்க விதிக்கப்பட்ட தடை தொடர்கிறது. வணிக வளாகங்களில் இயங்கும் பலசரக்கு கடைகள் , காய்கறி கடைகளும் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Tea Shop - YouTube

5. தனியாக செயல்படுகின்ற மளிகை, பலசரக்கு மற்றும் காய்கறி விற்பனை செய்யும் கடைகள் பகல் 12 மணிவரை மட்டுமே இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும் குளிர்சாதன வசதியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒரே சமயத்தில் 50% வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

6. மளிகை,பலசரக்கு மற்றும் காய்கறி விற்பனை செய்யும் கடைகளை தவிர அனைத்து கடைகளும் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மருந்தகங்கள், பால் விநியோகம்போன்ற அத்தியாவசியப் பணிகள் வழக்கம் போல எந்தத் தடையுமின்றி செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

Coronavirus: No UNSC meet scheduled yet to discuss COVID-19 crisis

7. அனைத்து உணவகங்களிலும் பார்சல் சேவை வழங்க மட்டும் அனுமதிக்கப்படும். தேநீர் கடைகள் நண்பகல் 12 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும். உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் உட்கார்ந்து உண்பதற்கு அனுமதியில்லை. முழு ஊரடங்கு அமலில் உள்ள நாட்களில், உணவகங்களில் காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், நண்பகல் 12 மணி முதல் மதியம் 3 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படுகிறது.


8.உள் அரங்கங்கள் மற்றும் திறந்த வெளியில், சமுதாயம், அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாச்சார நிகழ்வுகள் மற்றும் இதர விழாக்களுக்குத் தடை செய்யப்படுகிறது. திரையரங்குகள் செயல்படவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

9.ஏற்கெனவே, இறப்பு சார்ந்த நிகழ்வுகளில், 25 நபர்களுக்கு மிகாமல் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இறுதி ஊர்வலங்கள் மற்றும் அதைச் சார்ந்த சடங்குகளில் 20 நபர்களுக்கு மேல் அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

10. ஏற்கெனவே, மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் அழகு நிலையங்கள், இயங்கத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்துக் கட்டுப்பாட்டு பகுதிகளிலும், அழகு நிலையங்கள், இயங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது தவிர, சனிக்கிழமை, ஞாயிற்றுக் கிழமைகளில், மீன் மார்க்கெட், மீன் கடைகள், கோழி இறைச்சிக் கடைகள் மற்ற இறைச்சிக் கடைகள் செயல்பட அனுமதி இல்லை. இதர நாட்களில் காலை 6 மணி முதல் 12 வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. . பொது மக்கள் வெளியில் செல்லும் போதும், பொது இடங்களிலும் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது

You'r reading இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன? Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை