புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

by Madhavan, May 5, 2021, 17:05 PM IST

புறநகர் ரயில்களில் நாளை முதல் பயணிக்க அனுமதியில்லை என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும்யார் யாரெல்லாம் பயணிக்கலாம் என்ற அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

கொரோனா பரவலின் இரண்டாம் அலை நாடு முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக நாளை முதல் பல புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. மாநகர பேருந்துகள் 50சதவீத பயணிகளுடன் இயங்கும் என கூறப்பட்டுள்ளது.

சென்னையில் புறநகர் ரயில் சேவை எப்போது?: ரயில்வேத் துறை டிஐஜி பதில் | Southern Railway ready to resume local train operations in chennai | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News ...

அதேபோல நாளை முதல் அமலுக்குவரும் நிலையில் 20ஆம் தேதிவரை புறநகர் ரயிலில் பொதுமக்கள் பயணிக்க அனுமதியில்லை என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. முன்களப் பணியாளர்கள், ரயில்வே ஊழியர்கள், மத்திய, மாநில அரசு ஊழியர்கள் மட்டும் புறநகர் ரயிலில் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் உயர் நீதிமன்றம் உள்ளிட்ட அனைத்து நீதிமன்ற நீதிபதிகள், வழக்கறிஞர்களும் புறநகர் ரயிலில் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் துறைமுகப் பணியாளர்கள், ஊடகத்துறையினர், மின்னணு வணிக்கத்தினர், அரசு, தனியார் வங்கிப் பணியாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் அனைவரும் இதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

You'r reading புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு! Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை