கேரளா, மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா தொற்று மீண்டும் வேகமாகப் பரவி வருகிறது. குறிப்பாகக் கேரளாவில் தினந்தோறும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது.
இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் கேரளாவில் தொடர்பின் மூலம் ஒருவருக்குப் பரவியது. தற்போது பரவி வரும் வைரசை விட இந்த உருமாறிய வைரஸ் 70 சதவீதம் வேகத்தில் பரவும் என்பதால் நோய் பரவலைக் கட்டுப்படுத்த கேரள சுகாதாரத் துறை தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
கடந்த சில நாட்களாக நாட்டில் பல மாநிலங்களில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை பரவல் அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா வைரஸ் பரவல் அதிக அளவில் உள்ளது. சில வெளிநாடுகளிலும் உருமாறிய கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது.
ஆம்பூர் திமுக சட்டமன்ற உறுப்பினரான வில்வநாதனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிரா, கேரளாவில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் நோய் இந்தியாவில் ஒரு கோடியே 10 லட்சம் பேருக்குப் பாதித்திருக்கிறது. இதில் ஒரு கோடியே 7 லட்சம் பேர் வரை குணம் அடைந்துள்ளனர்.
இந்தியாவில் இது வரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 10 லட்சமாக உயர்ந்துள்ளது. இதில் ஒரு கோடியே 7 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் நோய் இந்தியாவில் ஒரு கோடிக்கும் அதிகமானோருக்குப் பரவியிருக்கிறது.
ஒரு சிறிய இடைவேளைக்குப் பின் மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
பெரம்பலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் நேற்று புதிதாக யாருக்கும் கொரோனா பாதிக்கவில்லை. 25 மாவட்டங்களில் புதிதாக 10க்கும் குறைவானவர்களுக்கு நோய் பாதித்துள்ளது.சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் நோய் இந்தியாவில் இது வரை ஒரு கோடியே 9 லட்சம் பேருக்குப் பாதித்துள்ளது.
கேரளாவில் கொரோனா பரவல் கட்டுக்கடங்காமல் பரவுவதைத் தொடர்ந்து அந்த மாநிலத்தில் இருந்து கர்நாடகா செல்வதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தங்கள் மாநிலத்திற்கு வரும் கேரளாவைச் சேர்ந்த அனைவரும் கொரோனா ஆர்டிபிசிஆர் பரிசோதனை நடத்தி நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்று கர்நாடக மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கோவை மற்றும் மதுரை மாவட்டங்களில் மட்டுமே புதிதாக 20க்கும் அதிகமானோர்களுக்கு கொரோனா தொற்று பாதித்துள்ளது. பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் புதிய பாதிப்பே இல்லை.