நெல்லை கோயில் பூசாரி கொலை வழக்கில் 7 பேர் சரண்

by Ari, Apr 21, 2021, 07:35 AM IST

நெல்லையில் கோயில் பூசாரி கொலை வழக்கில் 7 பேர் சரண் அடைந்துள்ளனர்.

சீவலப்பேரியில் தாமிரபரணி ஆற்றங்கரையில் பிரசித்தி பெற்ற சுடலைமாட சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலில் கடந்த 14ம் தேதி சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு கோயிலில் சிறப்பு வழிபாடு நடந்துள்ளது. அதை முன்னிட்டு கோயிலில் பலர் கடைகள் போட்டுள்ளனர். அப்போது கோயிலை நிர்வகிக்கும் குறிப்பிட்ட சமூகத்தினருக்கும், கடைகள் அமைத்த வேறு சமூகத்தினருக்கும் இடையில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

பிரச்னை தொடர்வதை விரும்பாத கோயில் நிர்வாகத்தினர், ஞாயிற்றுக்கிழமை அன்று கோயிலில் அனைத்து தரப்பு முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். பேச்சுவார்த்தையின் போது அங்கு இருந்தவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு அடிதடி சண்டை நடந்துள்ளது.அதில், பூசாரி சிதம்பரம் மற்றும் நடராஜ பெருமாள் ஆகியோரை சிலர் அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர்.

படுகாயமடைந்த இருவரையும் மீட்டு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது வழியில், சிதம்பரம் உயிரிழந்தார். நடராஜ பெருமாள் படுகாயங்களுடன் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறிது சீவலப்பேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந்நிலையில் சீவலப்பேரி காவல்நிலையத்தில், 23 வயதான முருகன், பேச்சிக்குட்டி, 19 வயதான இசக்கி முத்து, மாசான முத்து, முத்துமாரிதுரை, 24 வயதான தங்கப்பாண்டி மற்றும் ஒரு சிறுவன் ஆகிய 7 பேர் சரணடைந்துள்ளனர்.

You'r reading நெல்லை கோயில் பூசாரி கொலை வழக்கில் 7 பேர் சரண் Originally posted on The Subeditor Tamil

More Tirunelveli News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை