பயிரை மேய்ந்தது வேலியாம்.. பைக்கை திருடியது போலீசாம்..

by Balaji, Dec 30, 2020, 18:57 PM IST

நெல்லை மாவட்டம் கூடங்குளம் காவல் நிலையத்தில் ஒரு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனத்தைக் கணவர் உதவியுடன் திருடிய அதே போலீஸ் நிலையத்தில் வேலை பார்க்கும் பெண் காவலரே திருடி இருப்பது காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ஒரு வழக்கில் மதன் ராஜ் என்பவரது இருசக்கர வாகனம் மற்றும் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டு கூடங்குளம் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தது. நேற்று அவை இரண்டும் திடீரென காணாமல் போனது. இதுகுறித்து தகவலறிந்த வாகன உரிமையாளர் மதன்ராஜ் உயர் அதிகாரிகளுக்குப் புகார் செய்திருந்தார். சம்பந்தப்பட்ட காவல் நிலைய சிசிடிவி பதிவுகளை வைத்து போலீசார் தீவிர விசாரணை. நடத்திவந்தனர். அவர்களும் இது குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதில் பைக் மற்றும் செல்போனை திருடியது கூடங்குளம் காவல் நிலையத்தில் பெண் காவலராக பணிபுரிந்து வரும் கிரேசியா (29) என்பவர் தான் என்று தெரியவந்தது இவர் ஸ்டேஷன் காவல் (பாரா) அலுவலில் இருக்கும்போது இரவு நேரங்களில் தனது கணவர் அன்புமணியை வரவழைத்து வழக்கு சம்பந்தமாகக் கைப்பற்றப்பட்ட நிலையத்தில் இருக்கும் இருசக்கர வாகனத்தை வாகனத்தைத் திருடிச் சென்றுள்ளார். இதுவரை இந்த செயலில் மூன்று பைகள் பைகளை அவர் திருடியது தெரிய வந்திருக்கிறது. மேலும் ஒரு மொபைல் போன் மற்றும் வெள்ளி அரைஞாண் கயிறு ஒன்றையும் திருடியுள்ளார். இதுதொடர்பாக இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

You'r reading பயிரை மேய்ந்தது வேலியாம்.. பைக்கை திருடியது போலீசாம்.. Originally posted on The Subeditor Tamil

More Tirunelveli News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை