70 வயது மூதாட்டியை கடத்தி கற்பழித்து கொன்ற கயவன்

தேனி மாவட்டம் கம்பம் அருகே 70 வயது மூதாட்டியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற இளைஞனை போலீசார் கைது செய்தனர்.

தேனி மாவட்டம் கம்பம் அருகே, காமயகவுண்டன்பட்டி செல்லும் இணைப்பு சாலையில் கடந்த 8-ம் தேதி தலையில் பலத்த காயங்களுடன் சுமார் 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டியின் சடலம் ஒன்று கிடப்பதாக கம்பம் வடக்கு காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், மூதாட்டியின் சடலத்தை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பரிசோதனையில் மூதாட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி உத்தரவின்பேரில் கம்பம் தனிப்படை அமைக்கப்பட்டு அந்த மூதாட்டி குறித்தும், மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தவர்கள் குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

கொலை நடந்த அன்று அந்த பகுதியில் நடமாடிய நபர்கள் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டி கள்ளர் பள்ளி தெருவை சேர்ந்த 24 வயதான ஞானேசன் மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தது தெரியவந்தது.

போலீசார் அவரை தேடிச்சென்றபோது திருப்பூருக்கு சென்றுவிட்டார். பின்னர் மீண்டும் தனது வீட்டுக்கு வந்தபோது மறைந்திருந்த போலீசார் அவரை சுற்றிவளைத்து பிடித்தனர்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சம்பவத்தன்று அதிக போதையில் சென்றபோது சாலையோரம் படுத்திருந்த மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து விட்டதாகவும், அதன்பிறகு அவர் தன்னை போலீசில் காட்டி கொடுத்துவிடுவார் என்ற பயத்தில் கொலை செய்துவிட்டு, சடலத்தை தென்னந்தோப்பில் வீசிச் சென்றதாகவும் கூறினார். இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement