தமிழ்நாட்டில் முதல் நாள் இரவு நேர ஊரடங்கு நிறைவு

by Ari, Apr 21, 2021, 05:32 AM IST

தமிழ்நாட்டில் முதல் நாள் இரவு நேர ஊரடங்கு இன்று காலை 4 மணியோடு நிறைவடைந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவலின் இரண்டாம் அலையை கட்டுப்படுத்த நேற்று முதல் தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது.

இந்த ஊரடங்கு நேற்றிரவு இரவு 10 மணி முதல் இன்று அதிகாலை 4 மணி வரை அமலில் இருந்தது. இரவு ஊரடங்கை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கடைகள் இரவு 9 மணிக்கு அடைக்கப்பட்டன. போலீசார் சோதனை சாவடிகள் அமைத்து பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

இரவு ஊரடங்களில், அரசு மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து, வாடகை கார், ஆட்டோ மற்றும் தனியார் வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களுக்கான பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டன.

அவசர மருத்துவ தேவைகளுக்கும், விமான நிலையம், ரயில் நிலையம் செல்வதற்கும் வாடகை கார், ஆட்டோ, தனியார் வாகனங்கள் அனுமதியுடன் சென்றன. பெட்ரோல் பங்க்குகளும் இயங்கின.

இந்நிலையில் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள இரவு நேர ஊரடங்கின் முதல் நாள் இன்று காலை 4 மணியோடு நிறைவு பெற்றது.

இதையடுத்து அதிகாலை 4 மணி முதல் பேருந்து போக்குவரத்து தொடங்கியது. வெளிமாவட்டங்களுக்கான தொலைதூர பேருந்து சேவைகளில் தொடங்கின. மேலும் பால், செய்தித்தாள் விநியோகம் உள்ளிட்ட பணிகளும் நடைபெறத் துவங்கியுள்ளன. இந்த இரவு நேர ஊரடங்கானது இன்று இரவு 10 மணிக்கு மீண்டும் அமலுக்கு வருகிறது.

You'r reading தமிழ்நாட்டில் முதல் நாள் இரவு நேர ஊரடங்கு நிறைவு Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை