சசிகலா இன்னமும் அதிமுகவின் பலருக்குஉதறலை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது இந்த நான்கெழுத்துச் சொல்.கடந்த நான்காண்டுகளில் சசிகலா மீதான அபிப்ராயத்தில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது.
தினகரனுக்குச் சிறிய அளவினான வெண்கலத்தில் செய்யப்பட்ட ஜெயலலிதா சிலை, வீரவாள் பரிசாக அளிக்கப்பட்டன.
அதிமுகவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே உச்சகட்டப் பனிப்போர் நிலவுவதால், கட்சி மீண்டும் உடையும் சூழல் ஏற்பட்டுள்ளது.முதல்வர் ஜெயலலிதா மறைந்த பிறகு அதிமுகவில் அடுத்தடுத்து பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன.
வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் சசிகலா நிச்சயம் போட்டியிடுவார் அதற்காக சில சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக டிடிவி தினகரன் தெரிவித்தார்.
ஊற்றி கொடுப்பவர் என்று டி.டி.வி. குடும்பத்தைப் பற்றித்தான் சொன்னேன். எந்த சமுதாயத்தையும் பழித்துப் பேசவில்லை என்று சி.வி.சண்முகம் வருத்தம் தெரிவித்துள்ளார்.அதிமுகவில் சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரை சேர்க்கவே மாட்டோம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆணித்தரமாகக் கூறியுள்ளார்.
டி.டி.வி.தினகரன்தான் கூவத்தூரில் எனக்கு ஊற்றிக் கொடுத்தான் என்று ஏகவசனத்தில் அவரை அமைச்சர் சி.வி.சண்முகம் திட்டி தீர்த்திருக்கிறார். இதற்கு தினகரன் அளித்த பதிலில், அதிகாரப் போதை கண்ணை மறைக்கிறது என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
சசிகலாவுக்கு எதிராக முதல்வர் மற்றும் அமைச்சர் ஜெயக்குமார் பேசி வருகையில் ஓ.பி.எஸ் உள்ளிட்ட தென்மாவட்ட அமைச்சர்கள் மவுனம் சாதிப்பது அதிமுகவில் உச்சக்கட்ட குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.பெங்களூருவில் இருந்து சசிகலா, பிப்.8ம் தேதி காலை புறப்பட்டு மறுநாள் காலையில் சென்னை வந்து சேர்ந்தார்.
அதிமுகவுக்குள் சசிகலா வருகையை பாஜகவினர் விரும்புகிறார்களா, அவரை ஒதுக்க விரும்புகிறார்களா என்று பலரும் கருத்து கூறியுள்ளனர்.பெங்களூருவில் சிறைத் தண்டனை முடிந்து சசிகலா கடந்த 2 நாட்களுக்கு முன்பு காரில் சென்னை திரும்பினார். அவரது காரில் அதிமுக கொடி கட்டப்பட்டிருந்தது.
வளர்ப்பு மகன் - இந்த வார்த்தையைச் சொன்னாலே வி.என். சுதாகரன் தான் நினைவுக்கு வருவார். அந்த அளவிற்கு இந்த வார்த்தை ஒரு உச்சக்கட்ட முக்கியத்துவத்தைப் பெறக் காரணமாக இருந்தவர் வி.என். சுதாகரன்.
சசிகலாவின் உடல் நிலை குறித்து ரஜினிகாந்த் தொலைபேசியில் விசாரித்ததாக டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார். பெங்களூருவில் இருந்து சசிகலா நேற்று காலை புறப்பட்டு இன்று காலையில் வந்து சேர்ந்தார்.