கொரோனாவுக்கு பிரதமர் மோடியின் குடும்பத்தின் பறிபோன உயிர்!

by Sasitharan, Apr 27, 2021, 21:08 PM IST

கொரோனா தொற்று காரணமாக பிரதமர் நரேந்திர மோடியின் சித்தி நர்மதா பென் மோடி உயிரிழந்துள்ளார்.

இதனை பிரதமர் மோடியின் சகோதரர் பிரகலாத் மோடி உறுதி செய்துள்ளார். 80 வயதான நர்மதா பென் அகமதாபாத் நகரில் உள்ள நியூ ராணிப் பகுதியில் தனது பிள்ளைகளுடன் வசித்து வந்தார். இந்த நிலையில், சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நர்மதா குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலன் அளிக்காத நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பாக பேசியுள்ள பிரதமர் மோடியின் சகோதரர் பிரகலாத் மோடி, ``எங்கள் தந்தையின் சகோதரர் ஜக்ஜீவன் தாஸின் மனைவியார் நர்மதாபென் பத்து நாட்களுக்கு முன்னர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். அவரது உடல் நலன் தொடர்ந்து பாதிக்கப்பட்டது. இந்நிலையில் அவர் இன்று உயிர் பிரிந்தார்” என தெரிவித்துள்ளார்.

You'r reading கொரோனாவுக்கு பிரதமர் மோடியின் குடும்பத்தின் பறிபோன உயிர்! Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை