பெரிய கடைகளை மூட உத்தரவு.. தமிழக அரசு புதிய கட்டுப்பாடு!

by Sasitharan, Apr 27, 2021, 21:19 PM IST

தமிழகத்தில் ஒரேநாளில் 15,830 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல் தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் 77 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றால் இதுவரை 11.13 லட்சம் பேர் பாதிப்பு - 13,728 பேர் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. நேற்றைவிட இன்று தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு ஓரளவு குறைந்துள்ளது சற்று ஆறுதல் அளிக்கும் விஷயமாக இருக்கிறது.

இதற்கிடையே, 3000 சதுர அடிக்கு மேல் உள்ள பெரிய கடைகளை மூட உத்தரவு பிறப்பித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக தலைமைச்செயலாளர் ராஜீவ் ரஞ்சன் கடிதம் எழுதியிருக்கிறார். சென்னை மாநகராட்சி பகுதிகளிலும் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது

You'r reading பெரிய கடைகளை மூட உத்தரவு.. தமிழக அரசு புதிய கட்டுப்பாடு! Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை