ஆப்போ ஏ53 5ஜி என்ற ஸ்மார்ட்போனை ஆப்போ நிறுவனம் கடந்த டிசம்பர் மாதம் அறிமுகம் செய்தது. அதைத் தொடர்ந்து தற்போது ஆப்போ ஏ53எஸ் 5ஜி ஸ்மார்ட் போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மீடியாடெக் டைமன்சிட்டி SoC பிராசஸரில் இது செயல்படும்.
ஆப்போ ஏ53எஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்:
தொடுதிரை: 6.52 அங்குலம் எச்டி+ (720X1600 பிக்ஸல்); 60Hz ரெப்ஃரஷ் விகிதாச்சாரம்
இயக்கவேகம்: 6 ஜிபி மற்றும் 8 ஜிபி
சேமிப்பளவு: 128 ஜிபி (மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் 1 டிபி வரை உயர்த்தும் வசதி)
செல்ஃபி காமிரா: 8 எம்பி ஆற்றல்
பின்புற காமிரா: 13 எம்பி + 2 எம்பி + 2 எம்பி (டிரிபிள் ரியர் காமிரா)
பிராசஸர்: மீடியாடெக் டைமன்சிட்டி 700 SoC
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 11; கலர்ஸ் ஓஎஸ் 11.1
மின்கலம்: 5000 mAh
5ஜி, 4 ஜி தொழில்நுட்பங்கள், வைஃபை, ஜிபிஎஸ், புளூடூத் வி5, யூஎஸ்பி டைப்-சி போர்ட், பக்கவாட்டில் விரல்ரேகை உணரி (ஃபிங்கர்பிரிண்ட் சென்ஸார்)கொண்ட ஆப்போ ஏ53எஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் 6 ஜிபி+128ஜிபி மாதிரி ரூ.14,990/- விலையிலும் 8 ஜிபி + 128 ஜிபி மாதிரி ரூ.16,990/- விலையிலும் விற்பனையாகும். வரும் மே 2ம் தேதி நண்பகல் 12 மணி முதல் ஃபிளிப்கார்ட் தளத்தில் விற்பனை ஆரம்பமாகும். விலை சலுகைகளும் உள்ளன.