20 எம்பி செல்ஃபி காமிராவுடன் மி 11 எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்

by SAM ASIR, Apr 25, 2021, 22:48 PM IST

ஸோமி நிறுவனத்தின் மி 11 அல்ட்ரா, மி 11 எக்ஸ் மற்றும் மி 11எக்ஸ் ப்ரோ ஆகிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாயிருப்பதுடன் மி 11 எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போனின் விற்பனையும் ஆரம்பித்து நடைபெற்று வருகிறது. அடுத்து மி 11 எக்ஸ் ஸ்மார்ட்போனின் விற்பனை தொடங்க உள்ளது.

மி 11எக்ஸ் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்:

தொடுதிரை: 6.67 அங்குலம் (1080X2400 பிக்ஸல்)
ஸ்பீக்கர்: டூயல் ஸ்பீக்கர்
முன்புற காமிரா: 20 எம்பி ஆற்றல்
பின்புற காமிரா: 48 எம்பி (சோனி ஐஎம்எக்ஸ்582 சப்போர்ட் ஓஐஎஸ்) + 8 எம்பி ஆற்றல் (அல்ட்ரா வைடு - 119 டிகிரி எஃப்ஓவி)+ 5 எம்பி (டிரிபிள் ரியர் காமிரா)
பிராசஸர்: குவல்காம் ஸ்நாப்டிராகன் 870
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 11
மின்கலம்: 4520 mAh
5 ஜி தொழில்நுட்பம், டூயல் பேண்ட் வைஃபை, வைஃபை 6, ஜிபிஎஸ், ஏஜிபிஎஸ், NavIC, புளூடூத் வி5.1,
மி 11எக்ஸ் ஸ்மார்ட்போனின் 6 ஜிபி + 128 ஜிபி மாதிரி ரூ.29,999/- விலையிலும் 8 ஜிபி + 128 ஜிபி மாதிரி ரூ.31,999/- விலையிலும் கிடைக்கும். ஏப்ரல் 27ம் தேதி முதல் இதன் விற்பனை தொடங்கும்.

You'r reading 20 எம்பி செல்ஃபி காமிராவுடன் மி 11 எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் Originally posted on The Subeditor Tamil

More Technology News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை