டிரிபிள் ரியர் காமிரா: 5 ஜி தொழில்நுட்பம் ஆப்போ ஏ74 5ஜி அறிமுகம்

by SAM ASIR, Apr 21, 2021, 19:11 PM IST

5ஜி தொழில்நுட்பத்துடன் சூப்பர் நைட்டைப் ஸ்டாண்ட்பை வசதி கொண்டதாக ஆப்போ ஏ74 5ஜி அறிமுகமாகியுள்ளது. இரவு 11 மணி முதல் காலை 7 மணி வரைக்கும் இதன் மின்னாற்றல் 2% மட்டுமே செலவாகும்.

வீடியோ சாட்டுக்கு 8.69 மணி நேரமும் கேம்பிளேக்கு 7.86 மணி நேரமும் இதன் மின்னாற்றல் போதுமானது.

ஆப்போ ஏ74 5ஜி ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்:

தொடுதிரை: 6.5 அங்குலம் எஃப்எச்டி+ எல்சிடி பஞ்ச்ஹோல், ஹைபர் கலர் (2400X1080 பிக்ஸல்)
இயக்கவேகம்: 6 ஜிபி
சேமிப்பளவு: 128 ஜிபி (எஸ்டி கார்டால் உயர்த்தலாம்)
செல்ஃபி காமிரா: 8 எம்பி
பின்புற காமிரா: 48 எம்பி + 2 எம்பி + 2 எம்பி
பிராசஸர்: குவல்காம் ஸ்நாப்டிராகன் 480 5ஜி
மின்கலம்: 5000 mAh

ஏப்ரல் 26ம் தேதி முதல் அமேசான் தளத்திலும் மற்ற முன்னணி விற்பனையகங்களிலும் ரூ.17,990/- விலையில் கிடைக்கும்.

ஆப்போ ஏ74 5ஜி ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு ஆப்போ இஎன்சிஓடபிள்யூ11 ரூ.1299/-க்கும், ஆப்போ பேண்ட் ரூ.2499/-க்கும் ஆப்போ டபிள்யூ31 ரூ.2499/-க்கும் கிடைக்கும்.

You'r reading டிரிபிள் ரியர் காமிரா: 5 ஜி தொழில்நுட்பம் ஆப்போ ஏ74 5ஜி அறிமுகம் Originally posted on The Subeditor Tamil

More Technology News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை